நடிகர் தனுஷ் இயக்கத்தில் அவரே கதாநாயகனாக நடித்த படம் இட்லி கடை நேற்று முன்தினம் வெளியானது. இந்த படத்தை டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்திருக்கிறார். மேலும் தனுஷின் வுண்டர்ஃபார் பிலிம்ஸ் நிறுவனமும் உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பன் உதயநிதி ஸ்டாலி் சார்பில் ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனமும் இந்த படத்தை இணைந்து தயாரித்துள்ளது.
கடந்த 1ம் தேதி வெளியான இட்லி கடை படம் ரூ. 10.40 கோடி வரை வசூல் செய்தது. ஆனால் கடந்தாண்டில் வெளியான ராயன் படம் ரூ. 8 கோடி வரை மட்டுமே வசூலித்த நிலையில் இட்லி கடை அதைவிட அதிகமாக முதல் நாளில் வசூலித்திருந்தது. ஏனெனில் படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்களே அதிகளவில் கிடைத்தது.
ஆனால் மறுநாள் 2ம் தேதியே 40 சதவீதம் வரை இட்லி கடை வசூல் குறைந்துவிட்டது. 2வது நாளில் மொத்தமே 6.5 கோடி ரூபாய் வரை மட்டுமே வசூல் செய்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி அவரது நடிப்பில் வெளியான காந்தாரா சாப்டர் 1 படம் என்று கூறப்பட்டாலும் அது ஒரு காரணமாக ஏற்றுக்கொண்டாலும் மற்றொரு முக்கிய காரணம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அதாவது கடந்த சனிக்கிழமை அன்று கரூரில் தவெக நடத்திய கூட்டத்தில் விஜய் கலந்துக்கொண்டு பேசினார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் திமுக தான் இதற்கு முக்கிய காரணம் என்று தவெக கட்சியினரும் விஜய் ரசிகர்களும் புகார் கூறி வருகின்றனர். இந்த சம்பவத்தால் திமுக மீது தவெகவினர் கடுமையான கோபத்தில் உள்ளனர்.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பன் உதயநிதி இப்போது ரெட் ஜெயின்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தில் புதிய சிஇஓவாக பொறுப்புக்கு வந்துள்ளார். இன்பன் உதயநிதி சிஇஓவாக பொறுப்பேற்ற பிறகு முதன்முதலில் வெளியாகிற படம் இட்லி கடை. எனவே இந்த படம் பெரிய வெற்றியை பெறக் கூடாது என்பதில் தவெக கட்சித் தொண்டர்கள் உறுதியாக உள்ளனர்.
அதனால் கடந்த 30ம் தேதி முதல் வீ பாய்காட் ரெட்ஜெயின்ட் மூவிஸ் என்ற டிரண்டை உருவாக்கி சமூக வலைதளங்களிலும் வாட்சப்பிலும் பரவ விட்டுள்ளனர். மேலும் இந்த செயலால் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நியூயார்க்கில் இட்லி கடை படத்தை 2ம் நாளே தியேட்டர்களில் இருந்து நீக்கி விட்டதாகவும் அந்தளவுக்கு தவெக கட்சியினரின் நடவடிக்கை இட்லி கடை படத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி ஒரு வீடியோவில் கூறியிருக்கிறார்.





