- Advertisement -
Homeபொழுதுபோக்குநெருக்கடிக்கு மேல் நெருக்கடி தந்த நடிகர் சூர்யா… வாடிவாசல் படம் டிராப் ஆக இதுதான் முக்கிய...

நெருக்கடிக்கு மேல் நெருக்கடி தந்த நடிகர் சூர்யா… வாடிவாசல் படம் டிராப் ஆக இதுதான் முக்கிய காரணமா? – வெளிச்சத்துக்கு வந்த உண்மைகள்!

- Advertisement -

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படம் குறித்த அக்ரிமென்ட் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே போடப்பட்டது. அப்போது நடிகர் சூர்யாவுக்கு ரூ. 30 கோடி சம்பளம் என்ற நிலையில் இந்த படம் எடுக்க திட்டமிடப்பட்டது. கலைப்புலி தாணு இந்த படத்தை தயாரிக்க முன்வந்தார்.

ஆனால் தொடர்ந்து பல காரணங்களால் இந்த படம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. கடைசியில் வாடிவாசல் படம் டிராப் என்ற தகவல் சில தினங்களுக்கு முன் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இயக்குனர் வெற்றிமாறனுக்கு நடிகர் சூர்யா தந்த நெருக்கடிகளே இதற்கு முக்கிய காரணம் என்பது உறுதியாகி உள்ளது.

- Advertisement -

இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் ஒரு நேர்காணலில் கூறியதாவது, வாடிவாசல் படம் டிராப் ஆக முக்கிய காரணம் நடிகர் சூர்யா போட்ட கண்டிஷன்கள்தான். வாடிவாசல் படத்தில் நடிக்க நான் ரூ. 30 கோடி மட்டுமே சம்பளம் பேசியிருக்கிறேன். இப்போது நான் ஒரு படத்தில் நடிக்க வாங்கும் சம்பளம் ரூ. 65 கோடி.

அதனால் வாடிவாசல் படத்தை ஒரு பாகமாக மட்டுமே நீங்கள் எடுக்க வேண்டும். மேலும் இந்த படத்துக்கு 2 ஆண்டுகள் கால்ஷீட் வேண்டுமானாலும் தருகிறேன். ஆனால் படத்தை எப்போது ஆரம்பித்து எப்போது முடிப்பீர்கள் என்பதற்கு நீங்கள் அக்ரிமென்ட் செய்து தர வேண்டும் என்றும் அடுக்கடுக்கான நெருக்கடிகளை தந்திருக்கிறார்.

- Advertisement -

இதன்பிறகுதான் இந்த பிரச்னையை மேலும் வளர்த்துக்கொண்டே போனால் நன்றாக இருக்காது என்றுதான் வெற்றிமாறன் வாடிவாசல் படமே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். ஏனென்றால் வெற்றிமாறன் ஒரு படத்தை இயக்கினால் அது 2ம் பாகமாக உருவாவதை அவரால் தவிர்க்க முடியாது. கதையின் போக்கே அதை தீர்மானிக்கும் என்பதால் அவரால் 2ம் பாகம் இல்லை என்று உறுதியாக சொல்ல முடியாது.

மேலும் தயாரிப்பாளர் தாணுவுக்கும் சூர்யாவுக்கும் உள்ள நட்பின் காரணமாக வாடிவாசல் படத்தை 2ம் பாகமாக எடுக்கும் பட்சத்தில் மேலும் சூர்யா சம்பளம் கேட்க முடியாது. வெற்றிமாறனை பொருத்த வரை கால்ஷீட் விஷயத்திலும் அவரை கட்டுப்படுத்த முடியாது. 2 வருடம் கால்ஷீட் தந்தாலும் அவர் படத்தை நீட்டித்துக்கொண்டே போவதும் வழக்கம்தான். இந்த பிரச்னைகளால்தான் வாடிவாசல் படம் டிராப் ஆனது என்று அந்தணன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்