- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர்கள் தனுஷ், சிம்பு, விஷால் மீது ரெட்கார்டு, பிரச்னைகளை தீர்க்காமல் இனி அடுத்த படங்களில் நடிக்க...

நடிகர்கள் தனுஷ், சிம்பு, விஷால் மீது ரெட்கார்டு, பிரச்னைகளை தீர்க்காமல் இனி அடுத்த படங்களில் நடிக்க முடியாது – தயாரிப்பாளர் சங்கம் அதிரடி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் தனுஷ், சிம்பு என்கிற சிலம்பரசன் மற்றும் விஷால். எப்போதுமே இவர்கள் மீது ஏதேனும் விமர்சனங்களும், சர்ச்சைகளும், பிரச்னைகளும் இருந்துக்கொண்டே இருப்பதுதான் வழக்கம். குறிப்பாக தயாரிப்பாளர்களுடன் லடாய் என்பது இவர்களது வழக்கமாகவே இருந்து வருகிறது.

நடிகர் விஷால், தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்த போது அறக்கட்டளை மூலமாக ரூ. 12 கோடியை எடுத்து முறைகேடாக பயன்படுத்தி விட்டதா ஒரு புகார் நீண்ட காலமாக இருந்து வருகிறது. அந்த பிரச்னையில் தீர்வு கிடைக்காத வரை அவருக்கு ரெட்கார்டு என்று தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. இனி அவர் எந்த படத்திலும் நடிக்க கூடாது என்று முடிவாகி உள்ளது.

- Advertisement -

அதே போல் நடிகர் சிம்பு, வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பாளர் ஐசரி கணேஷூக்கு பல கோடி ரூபாய் தரவேண்டி இருப்பதால் அதற்காக சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு போட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிம்பு அதற்கான தொகையை தர சம்மதித்தாலும் தயாரிப்பாளர் கேட்கும் தொகையும், சிம்பு தருவதாக கூறும் தொகையும் சம்பந்தமின்றி இருப்பதால் சிம்புவுக்கு ரெட் கார்டு போடப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ், தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேஷனுக்கு பல ஆண்டுகளாக வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பி தராமல் இருப்பதாகவும், அதே போல் ஒத்துக்கொண்டபடி அவரது தயாரிப்பில் படத்தில் நடிக்கவில்லை என்பதற்காகவும் தனுஷ் மீதும் ரெட்கார்டு போடப்பட்டுள்ளது. அதனால் இட்லிக்கடை படத்துக்கு பிறகு அவர் எந்த படத்திலும் நடிக்க முடியாது.

- Advertisement -

குறிப்பாக மதுரை அன்பு தயாரிப்பில் அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் புதிய படம் ஒன்றில் நடிக்க சமீபத்தில் பூஜை போடப்பட்டது. இப்போது அந்த படத்திலும் தனுஷ் நடிக்க முடியாது என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

இப்படி நடிகர்கள் தனுஷ், விஷால் மற்றும் சிம்பு ஆகிய 3 பேர் மீதும் ரெட்கார்டு போடப்பட்டுள்ள நிலையில், தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், பெப்ஸி அமைப்பிடம், இவர்கள் நடிக்கும் எந்த படத்துக்கும் பெப்ஸி சார்பில் எந்த ஒத்துழைப்பும் தரக்கூடாது என்றும் மனு அளித்து விட்டனர். அதனால் இந்த விவகாரங்களை எல்லாம் தீர்த்த பிறகே தனுஷ், விஷால் மற்றும் சிம்பு ஆகியோர் அடுத்த படங்களில் நடிக்க முடியும் என்ற சூழல் உருவாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்