- Advertisement -
Homeபொழுதுபோக்கு20 வயதிலேயே அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை.. ஆனா அப்ப அது எனக்கு தெரியல ...ரெஜினா வெளியிட்ட தகவல்

20 வயதிலேயே அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை.. ஆனா அப்ப அது எனக்கு தெரியல …ரெஜினா வெளியிட்ட தகவல்

- Advertisement -

சினிமா எப்போதும் ஆணாதிக்கம் நிறைந்தது என்ற பேச்சு பல வருடங்களாக இருக்கிறது. அதற்கேற்றபடிதான் நடிகர்களுக்கான சம்பளத்திற்கும் நடிகைகளுக்கான சம்பளத்திற்கும் இடையே இருக்கும் வித்தியாசமும் உள்ளது. வெறும் பணப்பிரச்சினை மட்டுமே நடிகைகளுக்கு இல்லை. இன்னொரு பிரச்சனை தலையாய பிரச்சனையாக இருக்கிறது அதுதான் அட்ஜெஸ்ட்மென்ட்

இந்த அட்ஜெஸ்ட்மெண்ட்டால் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று பல பெண்களை ஏமாற்றி தயாரிப்பாளர்களோ இல்லை சினிமாவில் பணியாற்றும் வேறு சிலரோ இந்த வேலையை செய்கிறார்கள். இது குறித்து பெரும்பாலான நடிகைகள் சில வருடங்களுக்கு முன்னர்வரை கூட வெளிப்படையாக பேசியது இல்லை. ஒரு கட்டத்தில் உலகம் முழுவதும் மீ டூ என்ற விஷயம் பிரபலமானது. அதிலிருந்து பல துறைகளிலிருந்தும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் சுரண்டலை பேசிவருகின்றனர் பெண்கள். அதில் சினிமாவில்தான் அதிகமாக இருக்கிறது.

நடிகை நயன்தாராகூட தன்னிடமும் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்துகொள்ளும்படி ஒரு சிலர் கேட்டதாக ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார். அதேபோல் சரத்குமாரின் மகளான வரலட்சுமி தன்னிடமும் அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டதாக தெரிவித்தார். நயன்தாரா சினிமா பின்னணி இல்லாமல் வந்தவர். ஆனால் சினிமா பின்னணியில் இருந்து வந்த வரலட்சுமியிடமும் அட்ஜெஸ்ட்மென்ட் செய்கிறீர்களா என கேட்ட சம்பவம் தெரியவந்ததை அடுத்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தச் சூழலில் நடிகை ரெஜினா தனக்கு நேர்ந்த அட்ஜெஸ்ட்மென்ட் விவகாரம் குறித்து ஒரு பேட்டியில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அந்த பேட்டியில் பேசிய அவர், “எனது சினிமா கரியரில் ஒருமுறைதான் அட்ஜெஸ்ட்மெண்ட் தொடர்பான அனுபவத்தை பார்த்திருக்கிறேன். அப்போது எனக்கு 20 வயது இருக்கும். அதாவது பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டார்.

அப்போது அவர் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்துகொள்ளலாமா என என்னிடம் கேட்டார். சம்பள விஷயத்தில் அட்ஜெஸ்ட்மெண்ட் என்று நினைத்துக்கொண்டு நான் அவரிடம் சார் என்னுடைய மேலாளர் உங்களிடம் பேசுவார் என்று சொல்லிவிட்டேன். ஆனால் அவர் கேட் அட்ஜெஸ்ட்மெண்ட் வேறு விஷயத்தில் என்பதை பின்னர்தான் புரிந்துகொண்டேன். இந்த சம்பவத்துக்கு பிறகு எனக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் அனுபவம் எதுவும் ஏற்படவில்லை” என்றார்.

ரெஜினா கண்ட நாள் முதல் படத்தின் மூலம் அறிமுகமானார். அவரது நடிப்பில் கடைசியாக தமிழில் கருங்காப்பியம் என்ற படம் வெளியானது. அடுத்ததாக பார்டர், சூர்ப்பனகை, ஃப்ளாஷ்பேக் உள்ளிட்ட படங்கள் வெளியாகவிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்