- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் பாரதிராஜா ஹீரோவாக நடித்த புலவர் படம் - ரிலீஸ் தேதி அறிவிப்பு, இதில்...

இயக்குனர் பாரதிராஜா ஹீரோவாக நடித்த புலவர் படம் – ரிலீஸ் தேதி அறிவிப்பு, இதில் அவரோட கேரக்டரே ரொம்ப மாஸா இருக்குதே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் சிவாஜி கணேசன் விஜயகாந்த் பாரதிராஜா கே பாக்யராஜ் போன்ற அற்புதமான கலைஞர்கள் எல்லாம் மீண்டும் ஒருமுறை பிறந்து வர மாட்டார்களா? என்பதுதான் இன்றைய தமிழ் சினிமா ரசிகர்களின் ஏக்கமாக உள்ளது. ஏனென்றால் அவர்கள் எல்லாம் கலையம்சம் நிறைந்த பொக்கிஷமான மனிதர்கள்.

என் இனிய தமிழ் மக்களே என்ற கணீர் வார்த்தைகளால் ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. அவர் இயக்கிய படங்களில் எல்லாம் ரசிகர்கள், தங்களை நேரில் பார்த்தார்கள். தன்னுடன் வாழும் சக மனிதர்களையே திரையிலும் பார்த்தார்கள். வாழ்க்கையின் மறுபக்கங்களை உணர்ந்து வருந்தினார்கள். பலர் திருந்தினார்கள்.

- Advertisement -

அப்படிப்பட்ட இயக்குனர் பாரதிராஜா இயக்கிய படங்கள் எல்லாமே ஏதேனும் ஒரு விதத்தில் ரசிகர்களின் மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தின. அலைகள் ஓய்வதில்லை 16 வயதினிலோ சிவப்பு ரோஜாக்கள் முதல் மரியாதை கடலோர கவிதைகள் என திரையில் கவிதை பாடிய பாரதிராஜா, நடிப்பிலும் ரசிகர்களை கவர தவறவில்லை. பல படங்களில் அற்புதமான நடிப்பை தந்திருக்கிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் பாரதிராஜா உடல் நலக்குறைவால் 84 வயதில் காலமானார். அவரை தொடர்ந்து அவரது சீடர் கே பாக்யராஜூம் திடீரென மறைந்து போனார். கடைசியாக இயக்குனர் பாரதிராஜா கதையின் நாயகனாக நடித்த படம் புலவர். இதில் அவர் மெய்யாண்டவர் என்ற ஓய்வு பெற்ற போலீஸ் கான்ஸ்டபிள் கேரக்டரில் அவர் நடித்திருக்கிறார்.

- Advertisement -

தன்னுடன் பணி செய்த மற்றொரு கான்ஸ்டபிளுக்கு ஒரு கொலை வழக்கை கண்டுபிடிப்பதற்கு உதவுகிற ஒரு கேரக்டரில் பாரதிராஜா, இந்த படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். புலவர் படத்தை முருகையா என்ற புதுமுக இயக்குனர் டைரக்ட் செய்திருக்கிறார். சூப்பர் டாக்கிஸ் மற்றும் ஒயிட் நைட்ஸ் நிறுவனங்கள் சார்பில் இந்த படத்தை சபீர் பாரத் காசி விஸ்வநாதன் இணைந்து தயாரித்துள்ளனர்.

புலவர் படத்துக்கு அஜ்மல் கான் விஜய் இசையமைத்துள்ளார். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த புலவர் படம் வருகிற 25ம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இயக்குனர் இமயம் பாரதிராஜா கதையின் நாயகனாக நடித்த கடைசி படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் பாரதிராஜாவின் முகத்தை, அவரது கணீர் குரலை திரையில் பார்க்க ஒரு வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது.

- Advertisement -

சற்று முன்