- Advertisement -
சென்சார் என்ற திரைப்படம் தியேட்டரில் வெளியாகும் முன்பே அந்த படத்தின் திரைக்கதையை புத்தகமாக வெளியிடுகிறார் இயக்குனர் ராம்நாத் பழனிகுமார். அம்பாசமுத்திரம் அம்பானி திருநாள் ஆதார் படங்களை இயக்கிய ராம்நாத் பழனிக்குமார் திண்டுக்கல் சாரதி படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதியவர். வழக்கமான நடைமுறைக்கு மாறாக சென்சார் படம் வெளியாவதற்கு முன்பே திரைக்கதையை புத்தகமாக அவர் வெளியிடுவது ரசிகர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றுள்ளது.





