- Advertisement -
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய தவெக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத், தவெக கட்சிக்கு வந்த பிறகு எனக்கு தரித்திரம் வந்து விட்டது என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அவர் தவெக வை விட்டு விலகியதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து நாஞ்சில் சம்பத் கூறுகையில், இது இயக்கம் அல்ல இது ரசிகர் மன்றம். இது கட்சி அல்ல இது கார்ப்பரேட் கம்பெனி. ஆதவ் போன்றவர்களின் அதிகார தோரணை என்னை அச்சப்பட வைக்கிறது. தமிழ்நாடு இவர்கள் கையில் சென்றால் என்ன ஆகும்? என்று எண்ணி பார்க்கிறேன். நெஞ்சம் பதறுகிறது. ஆகவே தமிழ் பற்றுக்காகவும் தமிழ்நாட்டின் நலனுக்காகவும் இந்த போலி கூட்டத்திலிருந்து விடைபெறுகிறேன். நான் வெளியேறுவது விலகல் அல்ல விடுதலை என்று நாஞ்சில் சம்பத் கூறியதாக இணையத்தில் பரவி வருகிறது.





