- Advertisement -
Homeபொழுதுபோக்குமுத்து என்கிற காட்டான் வெப் தொடர் எப்படி இருக்கிறது? நடிகர் விஜய் சேதுபதி தயாரிப்பாளராக ஜெயித்தாரா?...

முத்து என்கிற காட்டான் வெப் தொடர் எப்படி இருக்கிறது? நடிகர் விஜய் சேதுபதி தயாரிப்பாளராக ஜெயித்தாரா? – கலாய்த்து தள்ளிய பிரபலம்!

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் முத்து என்கிற காட்டான் வெப் தொடர் கடந்த 27ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியானது. இந்த தொடரில் நடிகர் விஜய் சேதுபதியுடன் மலையாள நடிகர் இர்ஷாத் அலி ஹாலிவுட் நடிகர் மிலிண்ட் சோமன் நடிகர்கள் சிங்கம் புலி வேட்டை முத்துக்குமார் ரிஷா ஜேக்கப்ஸ் விஜே பார்வதி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த தொடருக்கு ராஜேஷ் முருகன் இசையமைத்துள்ளார். மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த தொடரை நடிகர் விஜய் சேதுபதி சொந்தமாக தயாரித்துள்ளார். காக்கா முட்டை இயக்குனர் மணிகண்டனுடன் இணைந்து அஜீத்குமார் இந்த தொடரை இயக்கியுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் முத்து என்கிற காட்டான் குறித்து ப்ளு சட்டை மாறன் தனது வீடியோவில் கூறியிருப்பதாவது, இந்த வெப் தொடரின் ஆரம்பத்தில் ஒரு காட்டுப் பகுதியில் விஜய் சேதுபதியின் வெட்டப்பட்ட தலை கிடக்கிறது. அந்த தலைக்கு அருகில் பணமும் ஒரு கடிதமும் உள்ளது. அந்த தலையை வைத்து போலீசார் இது யாரென்று விசாரிக்க தொடங்கிய போது தான் இறந்தவர் பெயர் முத்து என்பது தெரிய வருகிறது.

போலீசார் அடுத்த கட்ட விசாரணையை தொடங்கி ஊர் ஊராக செல்கின்றனர். அப்போதுதான் முத்து என்பவன் வாட்ச் ரிப்பேர் செய்பவன் என்றும் இவன் கண்மணி நடனக்குழுவில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பாக இருப்பான் என்றும் பலர் பலவிதமான கருத்துக்களை சொல்கின்றனர். இப்படி விசாரணை சென்று கொண்டிருக்கிறது. இந்த முத்து யார், இவரை யார் கொன்றது என அடுத்தடுத்த திருப்பங்களுடன் கதை நகர்கிறது. 10 எபிசோடுகள் கொண்ட இந்த தொடரின் ப்ரீ ரிலீஸ் ஈவண்டில் முதல் 3 எபிசோடுகளை மட்டும் தான் போட்டுக் காட்டினார்கள்.

- Advertisement -

அந்த 3 எபிசோடும் அடுத்து என்ன நடக்கும் அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் அடுத்த 7 எபிசோடுகளும் ஜவ்வு மிட்டாய் போல இழுத்துவிட்டார்கள். இந்த 7 எபிசோடுகளும் சுவாரசியம் இல்லாமல் போனதற்கு காரணமே பல காட்சிகளை தேவையே இல்லாமல் எடுத்து வைத்து சொதப்பி இருக்கிறார்கள். பொதுவாக இது போன்ற திரில்லர் படத்தில் ஒவ்வொரு ரகசியத்தையும் உடைப்பார்கள்.

ஆனால் இந்த தொடரில் படம் முடிந்த பின்பும் குழப்பமே இருக்கிறது. முத்து என்கிற காட்டன் தொடரில் டிரெய்லர் வெளியான போது இந்த படத்தை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று தோன்றும். ஆனால் படத்தை பார்த்த பிறகு இந்த படத்தை எவனையும் பார்க்க விடக்கூடாது என்று தான் நினைக்கத் தோன்றுகிறது என்று ப்ளு சட்டை மாறன் தனது விமர்சனத்தில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்