- Advertisement -
Homeபொழுதுபோக்குவடிவேலு - பகத் ஃபாசில் கூட்டணியில் இன்று வெளியான மாரீசன் - இந்த முறை கம்பேக்...

வடிவேலு – பகத் ஃபாசில் கூட்டணியில் இன்று வெளியான மாரீசன் – இந்த முறை கம்பேக் கொடுத்தாரா வைகைப்புயல்? படம் எப்படி இருக்கிறது…?

- Advertisement -

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடிகர்கள் வடிவேலு பகத் ஃபாசில் காம்போவில் மாரீசன் படம் இன்று தியேட்டர்களில் ரிலீஸாகி இருக்கிறது. இந்த படத்தை சுதீஷ் சங்கர் என்பவர் டைரக்ட் செய்திருக்கிறார். சித்தாரா பிஎல் தேனப்பன் கோவை சரளா போன்றவர்களும் படத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை தனது 98வது படமாக சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்பி சௌத்ரி தயாரித்திருக்கிறார்.

மாரீசன் படத்தின் கதைக்களம் என்னவென்றால், பாளையங்கோட்டை ஜெயிலிலிருந்து வெளியே வரும் தயாளன் என்கிற பகத் பாசில், மீண்டும் தனது திருட்டுத்தொழிலை ஆரம்பிக்கிறார். வேலாயுதம் என்ற பெயர் கொண்ட வடிவேலு வீட்டில் திருட பகத் ஃபாசில் வருகிறார். அப்படி வரும்போது, கையில் விலங்குடன் அவர் கட்டிப் போடப்பட்டு இருக்கிறார். அதைப் பார்த்து பகத் பாசில் ஆச்சரியப்படுகிறார்.

- Advertisement -

எனக்கு அல்சைமர் என்ற ஞாபக மறதி நோய் இருக்குதுப்பா. அதனால் என் மகன் இப்படி என்னை கட்டிப்போட்டுட்டு போயிட்டான். என்னோட பேங்க் அக்கவுண்டுல நிறைய பணம் இருக்கு. நீ என்னை வெளியே கூட்டிட்டு போனால் உனக்கு கொஞ்சம் பணம் தருகிறேன் என்று வடிவேலுவிடம் பகத் ஃபாசிலிடம் யதார்த்தமாக கூறுகிறார். இதையடுத்து பணக்காரர் வடிவேலுவிடம் இருக்கும் மொத்த பணத்தையும் அபகரிக்க பகத் ஃபாசில் திட்டம் போடுகிறார்.

பைக்கில் வடிவேலுவை அழைத்துச் செல்கிறார். அப்படி அவர்கள் திருநெல்வேலியில் இருந்து திருவண்ணாமலை வரை பயணிக்கின்றனர். அப்போது நடக்கும் திரில்லர் சம்பவங்களே இந்த படத்தின் கதை. உண்மையில் வடிவேலு யார், பகத் பாசில் யார் போன்ற டிவிஸ்ட்டுகளுடன் ஆரம்பிக்கும் மாரீசன் படம் இரண்டாம் பாதியில் தான் கதையிலும் சூடு பிடிக்கிறது.

- Advertisement -

சுவாரசியமான கதைக்களத்தில் உருவான மாரீசனம் படம் நிச்சயமாக ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரு படமாக தான் உள்ளது. படத்தில் வரும் பல சம்பவங்களும் காட்சிகளும் ரசிகர்களுக்கு அடுத்தது என்ன அடுத்தது என்ன என்ற ஆர்வத்தையும் தூண்டிவிடுகிறது. பின்னணி இசை பல இடங்களில் காட்சிகளை இன்னும் விறுவிறுப்பாக மாற்றுகிறது. நடிப்பில் வடிவேலுவும் பகத் ஃபாசிலும் ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் திறமையை காட்டியிருக்கின்றனர்.

நடிகர் வடிவேலுக்கு இன்னும் கொஞ்சம் மேக்கப்பில் கவனம் செலுத்தி இருக்கலாம். இது துப்பறியும் கதையாக உள்ளதால் விறுவிறுப்பான சில காட்சிகளில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பை கூட்டியிருக்கலாம். படத்தின் பல காட்சிகள் நீளமாக இழுத்துக்கொண்டே போவதும் ரசிகர்களுக்கு சலிப்பை தருகிறது. இதுபோன்ற குறைகளை தவிர்த்து விட்டு பார்த்தால் மாரீசன் நிச்சயமாக தியேட்டருக்கு சென்று பார்க்க வேண்டிய ஒரு நல்ல படம்தான் என்பதை உறுதியாகி சொல்லி விடலாம்.

- Advertisement -

சற்று முன்