- Advertisement -
Homeபொழுதுபோக்குகாந்தாரா சாப்டர் 2 ஸ்கிரிப்ட்டை கையில் எடுத்த இயக்குனர் ரிஷப் ஷெட்டி - மிக விரைவில்...

காந்தாரா சாப்டர் 2 ஸ்கிரிப்ட்டை கையில் எடுத்த இயக்குனர் ரிஷப் ஷெட்டி – மிக விரைவில் முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு, உற்சாகத்தில் ரசிகர்கள்!

- Advertisement -

கடந்த 10 ஆண்டுகளாக தென்னிந்திய மொழி படங்கள் 2 பாகங்கள் அல்லது 3 பாகங்களாகவெளிவருவது அதிகரித்துவிட்டது. இதற்கு முக்கிய காரணம் இயக்குனர் ராஜமௌலி இயக்கிய பாகுபாலி படம் தந்த மாபெரும் வெற்றிதான். அதுவரை தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் என இரண்டு பாகங்கள் கொண்ட படங்கள் மிக குறைவாக தான் வெளிவந்தன.

ஆனால் பாகுபலி படத்தின் 2 பாகங்கள் தந்த பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பிறகு தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி மொழிகளில் 2 பாகங்களாக உருவாகும் படங்கள் அதிகரித்துவிட்டன. அந்த வகையில் கன்னட சினிமாவில் கேஜிஎஃப் படத்துக்கு பிறகு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த ஒரு படம் என்றால் அது காந்தாரா படம்தான்.

- Advertisement -

கடந்த 2022ம் ஆண்டு வெளியான காந்தாரா படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது. இந்த படம் 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி 400 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை குவித்தது. கன்னடத்தில் உருவான காந்தாரா படம் பிறகு தெலுங்கு தமிழ் இந்தி என பிற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. உலகம் முழுவதும் இந்த படம் பேசப்பட்டது.

அடுத்து காந்தாரா படத்தின் முந்தைய பாகமாக 800ம் ஆண்டுகளில் நடந்த கதைக்களத்தை கொண்டு காந்தாரா சாப்டர் 1 படம் உருவானது. இந்த படம் 100 கோடி ரூபாய் செலவில் தயாராகி கடந்த ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. உலகம் முழுவதும் இந்த படம் 800 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்தது. இதையடுத்து காந்தாரா படங்களின் இயக்குனர் மற்றும் கதாநாயகன் ரிஷப் ஷெட்டி அடுத்ததாக காந்தாரா 3வது பாகம் அதாவது காந்தாரா சாப்டர் 2 படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளை துவங்கி விட்டார்.

- Advertisement -

இப்போது ஜெய் ஹனுமான் சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஆகிய படங்களில் ரிஷப் ஷெட்டி பிஸியாக நடித்து வருகிறார். இந்த 2 படங்களையும் முடித்த பிறகு காந்தாரா சாப்டர் 2 படப்பிடிப்பை துவங்கலாம் என அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. காந்தாரா காந்தாரா சாப்டர் 1 படங்களை தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தான் இந்த காந்தாரா சாப்டர் 2 படத்தையும் தயாரிக்க உள்ளதா அல்லது ரிஷப் ஷெட்டியே தனது சொந்த நிறுவனம் சார்பில் அவரே இந்த படத்தை தயாரிப்பாரா என்பதும் கேள்வியாக உள்ளது.

எனினும் காந்தாரா சாப்டர் 2 படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் போது இது குறித்த முக்கிய அப்டேட்களை தெரிந்து கொள்ளலாம். எப்படி இருப்பினும் ஜெய் ஹனுமான் சத்ரபதி சிவாஜி மகாராஜ் ஆகிய படங்களில் நடித்து முடித்த பிறகு காந்தாரா சாப்டர் 2 படப்பிடிப்பை ரிஷப் ஷெட்டி துவங்குவார் என்பதால் வருகிற 2027ம் ஆண்டில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

- Advertisement -

சற்று முன்