- Advertisement -
Homeபொழுதுபோக்குகருப்பு படத்துக்கு ரசிகர்கள் தந்து வரும் பேராதரவு - மதுரை அழகர்கோவில் 18ம்படி கருப்பணசாமிக்கு காணிக்கை...

கருப்பு படத்துக்கு ரசிகர்கள் தந்து வரும் பேராதரவு – மதுரை அழகர்கோவில் 18ம்படி கருப்பணசாமிக்கு காணிக்கை செலுத்திய இயக்குனர் ஆர்ஜே பாலாஜி!

- Advertisement -

இயக்குனர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா மற்றும் நடிகை திரிஷா இணைந்து நடித்த கருப்பு படம் கடந்த 15ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் சுவாசிகா ஷிவதா இந்திரன்ஸ் யோகிபாபு சுப்ரீத்ரெட்டி அனகா மாயா ரவி நட்டி நடராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூலித்துள்ள கருப்பு படம் உலக அளவில் 207 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

- Advertisement -

மேலும் இந்த படம் 300 கோடி ரூபாய் வரை வசூலிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் சூர்யா நடித்த படங்களில் இதுவரை சிங்கம் 2 படம் மட்டுமே 160 கோடி ரூபாய் ஒட்டுமொத்தமாக வசூலித்து தியேட்டரிக்கல் வெற்றி பெற்ற படமாக இருந்தது. அந்த சாதனையை முறியடித்து தற்போது கருப்பு படம் 207 கோடி ரூபாய் வசூலை கடந்திருக்கிறது,

இது மிகப்பெரிய உற்சாகத்தை நடிகர் சூர்யா மற்றும் அவரது ரசிகர்களுக்கு தந்துள்ளது. கருப்பு படத்துக்கு கிடைத்து வரும் அபரிமிதமான வரவேற்பை அடுத்து இயக்குனர் ஆர்ஜே பாலாஜி மற்றும் படக்குழுவினர் தமிழகத்தில் கருப்பு படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு நேரில் விசிட் செய்து ரசிகர்களை சந்தித்து வருகின்றனர்.

- Advertisement -

அப்போது கருப்பு படம் குறித்த பல சுவாரசியமான தகவல்களை இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் கருப்பு படத்திற்கு கிடைத்துவரும் மிகப்பெரிய வரவேற்பை அடுத்து மதுரை அழகர் கோவில் பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கு இயக்குனர் ஆர்ஜே பாலாஜி 18 அடி உயர அரிவாளை காணிக்கையாக செலுத்தினார்.

இந்த நிகழ்வில் நடிகர் சூர்யா ரசிகர்களும் பக்தர்களும் திரளாக கலந்து கொண்டு 18 அடி உயர அரிவாளை தோளில் சுமந்து வந்து கோவிலில் வைத்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. கருப்பு படத்துக்கு முன்பு நயன்தாரா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கிய மூக்குத்தி அம்மன் படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்