- Advertisement -
Homeபொழுதுபோக்குஆவேசம் பட இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா 47 படப்பிடிப்பு துவங்கியது - சூர்யா...

ஆவேசம் பட இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா 47 படப்பிடிப்பு துவங்கியது – சூர்யா கேரக்டர் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் நிறைய வெற்றிப் படங்களை கொடுத்தவர் நடிகர் சூர்யா. குறிப்பாக காக்க காக்க உன்னை நினைத்து கஜினி அயன் சிங்கம் சிங்கம் 2 வேல் என பல படங்கள் அவருக்கு பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுத் தந்தன.

ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு சூர்யாவின் படங்கள் படுதோல்வி படங்களாக மாறிவிட்டன. முழுமையான உழைப்பு இருந்தும் அவரது படங்கள் சரியான திரைக்கதையில் அமையாததால் பல படங்கள் பலத்த ஏமாற்றத்தை ரசிகர்களுக்கு தந்தன. 10 ஆண்டுகளுக்கு மேலாக சூர்யா தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார்.

- Advertisement -

அந்த வகையில் அவர் நடித்த தானா சேர்ந்த கூட்டம் 24 எதற்கும் துணிந்தவன் என்ஜிகே மாசு என்கிற மாசிலாமணி பசங்க 2 சிங்கம் 3 காப்பான் அஞ்சான் கங்குவா என தொடர்ந்து அவருக்கு தோல்வி படங்களாகவே இருந்தன. கடைசியாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான ரெட்ரோவும் ரசிகர்களிடம் பெரிய அளவில் பேசப்படவில்லை.

இதைத் தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான கருப்பு படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து நடிகர் சூர்யா இப்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து ஆவேசம் படத்தை இயக்கிய மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார்.

- Advertisement -

இது தற்போது சூர்யா 47 என்ற தற்காலிக டைட்டிலில் உருவாகிறது. இந்த படத்தில் பகத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். முதன்முறையாக சூர்யா பகத் பாசில் இந்த படத்தில் இணைந்து நடிக்கின்றனர். தமிழ் மற்றும் மலையாளம் என 2 மொழிகளில் ஒரே நேரத்தில் சூர்யா 47 படமாக்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது.

சென்னையில் நடந்த சூர்யா 47 படத்தின் துவக்க விழா பூஜையில் நடிகர் சூர்யா நடிகை நஸ்ரியா நசீம் இயக்குனர் ஜித்து மாதவன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக்கொண்டனர். சிங்கம் படத்துக்கு பிறகு போலீஸ் அதிகாரி வேடத்தில் இந்த படத்தில் சூர்யா நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சூர்யாவுக்கு சிங்கம் படம் பெரிய வரவேற்பை பாராட்டை பெற்றுத் தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்