நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான படம் ரெட்ரோ. கடந்த ஆண்டு மே மாதம் 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று வெளியானது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இந்த படம் வணிக ரீதியாக வெற்றிப் படம் என அறிவிக்கப்பட்டது.
ரெட்ரோ படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடித்த படம் கருப்பு. இந்த படத்தில் 2 வேடங்களில் சூர்யா நடித்திருக்கிறார். நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் திரிஷா ஷிவதா லப்பர் பந்து சுவாசிகா மன்சூர் அலிகான் நட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
இந்த படம் பலத்த இழுபறிக்கு பிறகு வருகிற மே 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் என உறுதி செய்யபப்ட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. கருப்பு படத்தின் இசை வெளியீட்டு விழா, மலேசியாவில் நடத்த திட்டமிடப்பட்டது. ஜனநாயகன் படம் போல கருப்பு படத்தையும் மிக பிரமாண்டமாக மலேசியாவில் நடத்த படக்குழு முடிவு செய்தது.
ஆனால் அதற்காக ரூ. 4 கோடி செலவாகும் என்ற நிலையில் அதற்கான ஸ்பான்சர் தேடப்பட்டது. ஆனால் துரதிஷ்டவசமாக ஸ்பான்சர் யாருமே கிடைக்காத சூழலில் கருப்பு படத்தின் இசை வெளியீட்டு விழாவை தமிழ்நாட்டில் நடத்த முடிவு செய்யபப்ட்டது.
இந்நிலையில் வருகிற 24ம் தேதி வெள்ளிக்கிழமை அல்லது 25ம் தேதி சனிக்கிழமையில் மதுரையில் கருப்பு படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் நடிகர் சூர்யா உட்பட சிவக்குமார் ஜோதிகா படத்தின் நாயகி திரிஷா உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளனர்.
கருப்பு படத்தின் மையக்கதை கருப்பன் சாமியை கொண்டதுதான். அதனால் கருப்பன் சாமியை வழிபடும் மக்கள் நிறைந்த மதுரையில் இந்த விழா நடத்தப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது. சூர்யாவுக்கும் அவரது தம்பி கார்த்திக்கும் மதுரையில் ரசிகர்கள் கூட்டம் மிக அதிகம். அதனால் விழா வேற லெவலில் ரசிகர்கள் கூட்டத்தால் களை கட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.





