- Advertisement -
Homeபொழுதுபோக்குதனது கடைசி படம் விஜய் 69ல் விஜய் நடிக்கவில்லை, தி கோட் படத்துடன் END கார்டு...

தனது கடைசி படம் விஜய் 69ல் விஜய் நடிக்கவில்லை, தி கோட் படத்துடன் END கார்டு போட்டுவிட்டாரா? – தீயாக பரவும் தகவலால் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு!

- Advertisement -

நடிகர் விஜய், இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் ( த கோட்) படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கியுள்ளார். வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. முன்னதாக வரும் 22ம் தேதி, செகன்ட் சிங்கிள் பாடல் வெளியிடப்படுகிறது.

இந்த படத்துக்கு பிறகு, டைரக்டர் எச் வினோத் இயக்கத்தில், விஜய் நடிக்கும் 69வது படத்தின் ஷூட்டிங் வரும் அக்டோபர் மாதம் துவங்க இருப்பதாக, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த படமாகவும், பான் இந்தியா படமாகவும் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படமே விஜய் நடிக்கும் கடைசி படமாகவும் இருக்கும் என்பதே ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது.

இதற்கிடையே தற்போது, விஜய் 69 படத்தில் நடிக்கவில்லை என்றும், அந்த படம் கைவிடப்பட்டு விட்டதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது. சமீபத்தில் நடந்த தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதால், இனி 69வது படத்தில் நடிக்க நேரத்தை ஒதுக்காமல் இப்போது முதல் அரசியல் களத்தில் தீவிரம் காட்ட விஜய் முடிவு செய்ததால், தி கோட் தான் கடைசி படம் என்றும் தகவல் பரவி வருகிறது.

ஆனால் அதே நேரத்தில், விஜய் 69 படத்தை நடிகர் விஜயின் மேனேஜர் ஜெகதீஸ்தான் தயாரிக்கிறார் என்றும், கேவிஎன் புரடக்சன் சார்பில் அந்த படத்தை மெகா பட்ஜெட்டில் தயாரிக்க பெங்களூருவில் முகாமிட்டு ஜெகதீஷ் அண்ட் கோ ப்ரீ புரடக்சன் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனால் விஜய் 69 படத்தை விஜய் கைவிட வாய்ப்பில்லை. கண்டிப்பாக தனது கடைசி படத்தில் அவர் நடித்துவிட்டுதான், முழுநேர அரசியல்வாதியாக அவர் தமிழக வெற்றிக் கழகம் பணிகளை தொடருவார் என்றும் தகவல் பரவி வருகிறது. இருந்தாலும் விஜய் 69 படம் கைவிடப்பட்டதாக கூறும் தகவல், அந்த படத்தின் டைரக்டராக கமிட் செய்யப்பட்டுள்ள எச் வினோத்துக்கு தான் பயங்கர அதிர்ச்சியை தந்துள்ளது.

எனினும் விஜய், அரசியல் களத்தில் குதித்து இருப்பதால் தமிழக சட்டசைப தேர்தல் வெற்றிதான் அவரது இலக்காக இருக்கிறது. அதனால், விஜய் 69 படத்தை அவர் கைவிடவும் அதிக வாய்ப்புள்ளது. அல்லது அடுத்த ஆண்டில் தேவைப்பட்டால் இதே கதையில் நடிக்கலாம் என்றும் கூட முடிவு செய்யவும் வாய்ப்புள்ளது எ்னறும் தகவல் பரவுகிறது. அதனால் இப்போதைக்கு விஜய் 69 படம், கேள்விக்குறிதான் என்று கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.

சற்று முன்