- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் அமிதாப் பச்சன், வேட்டையன் படத்தில் நடிக்க சம்மதித்தது எப்படி? சீக்ரட்டை ஓபன் செய்த டைரக்டர்...

நடிகர் அமிதாப் பச்சன், வேட்டையன் படத்தில் நடிக்க சம்மதித்தது எப்படி? சீக்ரட்டை ஓபன் செய்த டைரக்டர் தசெ ஞானவேல் – அந்த விஷங்களுக்காக உடனே ஓகே சொன்னாராமே?

- Advertisement -

இந்திய சினிமாவில் மூத்த நடிகராக மதிக்கப்படுபவர் இந்தி நடிகர் அமிதாப் பச்சன். தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எப்படி மக்களாலும் ரசிகர்களாலும் மிகவும் மரியாதையான இடத்தில் வைத்து பார்க்கப்பட்டாரோ, அதேபோன்ற ஒரு சீனியர் நடிகராக இந்தி பட உலகில் மிகவும் மதிக்கப்படும் மரியாதைக்குரிய நடிகராக இருப்பவர் அமிதாப்பச்சன். இவர் உலக அழகி பட்டம் வென்ற நடிகை ஐஸ்வர்யா ராயின் மாமனார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் அமிதாப்பச்சனை நடிக்க வைக்க பலமுறை பல இயக்குனர்கள் முயன்றும் அது சாத்தியப்படவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் மற்றும் இயக்குனர் எஸ் ஜே சூர்யா, உயர்ந்த மனிதன் என்ற படத்தில் நடிக்க அமிதாப்பச்சனை கமிட் செய்தார். ஆனால் அந்த படம் படப்பிடிப்பில் துவங்கப்படாமலேயே டிராப் ஆகிவிட்டது.

- Advertisement -

லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் தசெ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்தில், கேமியோ ரோலில் நடிகர் அமிதாப் பச்சன் நடித்திருக்கிறார். இந்த படத்தில் மனித உரிமை கமிஷன் தலைவராக அவரது கேரக்டர் இருப்பதாக தெரிகிறது. அமிதாப்பச்சனுக்கு தமிழ் மொழி தெரியாது என்பதால் அவருக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் ஏஐ தொழில்நுட்பத்தில் பின்னணி குரல் கொடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் ரஜினிகாந்த் இந்தியில் 3 படங்களில் அமிதாப்பச்சனுடன் இணைந்து நடித்தவர். பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வேட்டையன் படத்தில் ரஜினி அமிதாப் பச்சன் இணைந்து நடித்துள்ளனர். வேட்டையன் படத்தில் நடிக்க நடிகர் அமிதாப் பச்சன் சம்மதித்தது எப்படி என்பது குறித்து படத்தின் இயக்குனர் தசெ ஞானவேல் கூறியதாவது, வேட்டையன் படத்தின் கதையை எழுதிய போது, இந்த கேரக்டரில் அமிதாப்பச்சன்தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து இருந்தேன்.

- Advertisement -

அவரை மனதில் வைத்தே அந்த கேரக்டரை உருவாக்கினேன். அப்படி எழுதப்பட்டது தான் அமிதாப்பச்சனின் கேரக்டர். நான் அவரது ரசிகன் அல்ல, அவரின் படங்களையும் பெரிதாக பார்த்ததில்லை. மிகவும் பிரபலமான அவர் நடித்த பிளாக், சீணிகம், பிக்கு ஆகிய படங்களை மட்டும் பார்த்தேன். மற்றபடி அவரைப் பற்றி எல்லோரையும் போல தகவல்களாகவே தெரிந்து வைத்திருந்தேன்.

ரஜினியிடம் அமிதாப் பச்சனை நடிக்க கேட்கலாமா என்றேன். அதற்கு அவர் இதற்கு முன்பே சில படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தபோது, நாங்களே மறுத்துவிட்டோம். இப்போது மட்டும் ஒத்துக் கொள்வாரா என்ன, கேட்டுப்பாருங்கள், என்றார். முதலில் அவரை சந்தித்து கதை சொன்னபோது அவருக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. அடுத்த சந்திப்பில் வேட்டையன் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். கதை பிடித்திருந்ததாலும், ரஜினியுடன் மீண்டும் நடிக்க விரும்பியதாலும்தான் வேட்டையன் படத்தில் நடிக்க உடனே அவர் சம்மதித்தார் என்று இயக்குனர் தசெ ஞானவேல் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்