- Advertisement -
Homeபொழுதுபோக்குரூ. 10 லட்சம் மோடி செய்தாரா? மதகஜ ராஜா வில்லன் நடிகர் சோனு சூட் மீது...

ரூ. 10 லட்சம் மோடி செய்தாரா? மதகஜ ராஜா வில்லன் நடிகர் சோனு சூட் மீது அபாண்ட பழி சுமத்தப்பட்டதா? அவரே தந்த விளக்கம்!

- Advertisement -

இந்தியில் பிரபல வில்லன் நடிகராக வலம் வருபவர் சோனு சூட். பி வாசு இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தில், வாய் பேசாத கேரக்டரில் சோனு சூட் நடித்திருப்பார். அதே போல் நடிகர் சிம்பு நடித்த ஒஸ்தி படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். சமீபத்தில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான மதகஜ ராஜா படத்திலும் அரசியல்வாதியாக வில்லன் கேரக்டரில் சோனு சூட் நடித்திருந்தார்.

சினிமாவில் வில்லனாக நடித்து ரசிகர்களை மிரட்டும் நடிகர் சோனு சூட் உண்மையில் மிகவும் நல்ல மனிதராக இருந்து வருகிறார். குறிப்பாக துன்பத்தில் உள்ள மக்களுக்கு தேடிச் சென்று உதவும் குணம் கொண்டவராக உள்ளார். குறிப்பாக 4 ஆண்டுகளுக்கு முன் கொரோனா தொற்று பாதிப்பு காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலவிதங்களில் சோனு சூட் உதவிய செய்திகள் வெளியானது.

- Advertisement -

சினிமாவில் நாயகனாக நடிக்கும் பல நடிகர்கள் உண்மையில் மக்களுக்கு எந்தவிதமான உதவிகளை நன்மைகளை செய்ய முன்வருவது இல்லை. ஆனால் சினிமாவில் வில்லனாக நடிக்கும் சோனு சூட் போன்ற சில நடிகர்கள், உண்மையில் ஹீரோக்களாக இருந்து மக்களுக்கு உதவுகின்றனர். அதை சிலர் வெளியில் கூட காட்டிக்கொள்வது இல்லை.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன், ரூ. 10 லட்சம் மோசடி வழக்கில் நடிகர் சோனு சூட் மீது அரஸ்ட் வாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகி இணையத்தில் வைரலானது. ஆனால் உதவி கேட்பவர்களுக்கு கோடிக்கணக்கில் உதவி வரும் சோனு சூட், படங்களில் நடிக்கவும் பல கோடிகள் சம்பளம் வாங்கும் போது, ரூ. 10 லட்சம் மோசடி என்ற தகவல் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

இதுகுறித்து நடிகர் சோனு சூட் அளித்த விளக்கம் ஒன்றில் கூறியிருப்பதாவது, ஒரு மோசடி வழக்கு தொடர்பான வழக்கில் நான் ஒரு முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டு அதற்கான சம்மன்தான் எனக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து எனது வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் எனது சார்பாக இந்த விவகாரத்தில் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என விளக்கம் அளித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட அந்த நிறுவனத்தில் நான் நிறுவன தூதராகவோ அல்லது வேறு எந்த விதத்திலோ தொடர்பில் இல்லை. தேவையில்லாமல் தற்போது மீடியாக்களின் கவனத்தை என் மீது திருப்ப முயற்சி நடக்கிறது. பிரபலங்கள் எப்போதுமே இப்படி எளிதாக குறி வைக்கப்படுவது வருத்தம் தருகிறது. இந்த விஷயத்தில் நான் நிச்சயமாக கண்டிப்பான ஒரு நடவடிக்கையை எடுப்பேன் என்று நடிகர் சோனு சூட் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்