- Advertisement -
Homeபொழுதுபோக்குஅல்லு அர்ஜுன் - அட்லி - சன் பிக்சர்ஸ் இணையும் பிரம்மாண்டமான கூட்டணியில் இடம் பிடித்த...

அல்லு அர்ஜுன் – அட்லி – சன் பிக்சர்ஸ் இணையும் பிரம்மாண்டமான கூட்டணியில் இடம் பிடித்த இளம் இசையமைப்பாளர்… அடேங்கப்பா வளர்ச்சி என்றால் அது இதுதான்யா…

- Advertisement -

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அத்தனை திரைப்படங்களும் சூப்பர் ஹிட் அடித்து உள்ளன. முக்கியமாக புஷ்பா படத்தின் முதல் மற்றும் இரண்டு பாகம் அவரை வேறொரு தளத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களின் மூலம் அவர், உலகம் போற்றும் நாயகனாக அவதாரம் எடுத்துள்ளார்.

புஷ்பா படத்தில் அவரது மேனரிசமே பலரது கவனத்தையும் இருந்தது. ஒரு பக்கம் தோள்பட்டையை சாய்த்துக் கொண்டு அவர் நடந்து வருவதும், தாடியை சீவி விட்டு அவர் பேசும் பஞ்ச் டயலாக்குகளும் இந்தியா முழுக்க ஃபேமஸ் ஆகின. புஷ்பராஜ் கதாபாத்திரத்திலேயே வாழ்ந்த அல்லு அர்ஜுனுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர்.

- Advertisement -

இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருதையும் பெற்றார் அல்லு அர்ஜுன். தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான புஷ்பா படத்தின் இரண்டாம் பாகமும் சூப்பர் டூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது. தெலுங்கு சினிமாவில் மீண்டும் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்த படமாக அது அவதாரம் எடுத்தது.

இப்படி அல்லு அர்ஜுனின் மார்க்கெட் வேற லெவலுக்கு சென்று கொண்டிருக்க, அடுத்ததாக அவர் திரி விக்ரமுடன் கைகோர்த்து இருக்கிறார். இதற்கான படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்க இருக்கிறது. இதனைத் தொடர்ந்து புஷ்பா படத்தின் மூன்றாம் பாகத்திலும் நடிக்க இருக்கிறார் அல்லு அர்ஜுன். அதன் நடுவே அட்லியுடன் ஒரு படத்தில் நடிக்கவும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதற்கான பணிகளில் தற்போது தீவிரம் காட்டி வருகிறார் அட்லி. ஏற்கனவே இந்தி திரையுலகுக்கு சென்று, ஷாருக்கானை வைத்து ஜவான் எனும் திரைப்படத்தை இயக்கி தான் யார் என்பதை நிரூபித்தார் அட்லி. தற்போது தெலுங்கு பக்கம் அவர் தாவி இருப்பதால் இந்த திரைப்படத்தின் மீதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்கிறது.

இதற்காக அண்மையில் கலாநிதி மாறனை அட்லி மற்றும் அல்லு அர்ஜுன் சந்தித்ததாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனுக்கு இரண்டு கதாபாத்திரங்களாம். கதாநாயகியாக பிரியங்கா சோப்ரா நடிக்கிறாராம். இதன் இசையமைப்பாளர் யார் என்று கேள்வி எழுந்த சூழலில், அதற்கு தற்போது விடை கிடைத்திருக்கிறது. இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்தான் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளாராம். தற்போது சூர்யாவின் 45 வது படத்திற்கும் அவர்தான் இசையமைத்து வருகிறார். அவரது இசையில் இன்னும் ஒரு திரைப்படம் கூட வெளியாகாத சூழலில் அவருக்கு அடுத்தடுத்த பெரிய வாய்ப்புகள் வருவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

- Advertisement -

சற்று முன்