நடிகர் சிலம்பரசன், திரையுலக ஜாம்பவனாக மதிக்கப்படும் இயக்குனர் மற்றும் நடிகர் டி ராஜேந்தரின் மகன். அப்பாவை போலவே மகனும் கலையுலகில் திறமையான வாரிசாக தான் வலம் வந்தார். 6 வயதிலேயே லிட்டில் சூப்பர் ஸ்டாராக நடிக்க வந்த சிம்பு, இப்போதும் முன்னணி நடிகராக தான் இருக்கிறார்.
ஆனால் நன்றாக வளர வேண்டிய ஒரு கட்டத்தில் சிம்பு, நவரச நாயகன் நடிகர் கார்த்திக்கை சில விஷயங்களில் பின்பற்ற ஆரம்பித்தார். ஏனெனில் அவரை போலவே ஷூட்டிங் தாமதமாக வருவது, சில நேரங்களில் வராமலேயே இருந்து விடுவது, ஷூட்டிங் நாட்களில் லாட்ஜில் ரூம் போட்டு தூங்கி விடுவது போன்ற அடாவடியான செயல்களில் ஈடுபட்டார்.
இதனால் சிம்பு நடிக்கும் படத்தை இயக்குவது என்பது இயக்குனர்களுக்கும், அவர் நடிக்கும் படங்களை தயாரிப்பது என்பது தயாரிப்பாளர்களுக்கும் பெரிய தலைவலியாக மாறியது. இதனால் சிம்பு பல நல்ல படங்களில், நல்ல இயக்குனர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்தார். இதனால் அவரது சினிமா வளர்ச்சியும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் சிம்பு நடிக்க ஒத்துக்கொண்ட இரண்டு முக்கிய இயக்குனர்களின் படங்களில் அவர் நடிக்காமல் படம் பிரேக்கப் ஆனது, அதற்கான காரணங்கள் நீண்ட நாட்களுக்கு பின் இப்போது வெளிவந்துள்ளது. ஹொம்பாலா தயாரிப்பு நிறுவனம் சார்பில் சுதா கொங்காரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சிம்பு கமிட் செய்யப்பட்டார்.
இதற்காக சிம்பு, சுதா கொங்காரா, தயாரிப்பாளர் சந்திக்கும் வகையில் ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்முறை ஏற்பாடு செய்த மீட்டிங்குக்கு சிம்பு வரவில்லை. 2ம் முறை ஏற்பாடு செய்த மீட்டிங்குக்கும் சிம்பு வரவில்லை. இப்படி படம் குறித்து பேச நடத்தப்படும் மீட்டிங்குக்கே வராத ஒரு ஹீரோவை வைத்து எப்படி படம் எடுப்பீங்க என தயாரிப்பு நிறுவனம் கேள்வி கேட்டதால் நொந்து போன சுதா கொங்காரா அந்த படத்தையே டிராப் செய்து விட்டார்.
அதே போல் செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் கான் என்ற படம் ஷூட்டிங் நடந்துள்ளது. முதல் 2 நாள், டைரக்டர் செல்வராகவன் வந்து காத்திருந்த நிலையில், சிம்பு வரவில்லை. இதனால் கடுப்பான இயக்குனர் செல்வராகவன் அடுத்த 2 நாள் சிம்பு வந்த நிலையில், அவர் வரவில்லை. இப்படி இருவரும் வராமல் வெறுப்பான தயாரிப்பாளர் அந்த படத்தையே டிராப் செய்திருக்கிறார். ஆனால் இப்போது மணிரத்னம் இயக்கி வரும் தக்லைப் படத்துக்கு மட்டும் காலை 6 மணிக்கே ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆஜராகி விடுகிறார் சிம்பு என்பது குறிப்பிடத்தக்கது.





