- Advertisement -
Homeபொழுதுபோக்குகோட் படத்தில் நடிக்க பிரசாந்த், மைக் மோகன், பிரபுதேவா பெற்ற சம்பளம், டைரக்டர் வெங்கட்பிரபு சம்பளம்...

கோட் படத்தில் நடிக்க பிரசாந்த், மைக் மோகன், பிரபுதேவா பெற்ற சம்பளம், டைரக்டர் வெங்கட்பிரபு சம்பளம் இவ்வளவா? – படத்தோட மொத்த பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?

- Advertisement -

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவான படம் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடைந்துள்ள நிலையில், இன்னும் 2 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கியுள்ளது. அத்துடன் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைகிறது. அத்துடன் கடந்த 2 வாரங்களாக அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் படத்தின் விஎப்எக்ஸ் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.

சுருக்கமாக கோட் என அழைக்கப்படும் இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். அத்துடன் நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், சினேகா, மீனாட்சி சௌத்ரி, லைலா, ரம்யா கிருஷ்ணன், கனிகா, சுதீப், கஞ்சா கருப்பு, விடிவி கணேஷ், கேமியோ ரோலில் சிவகார்த்திகேயனும் நடித்துள்ளனர்.

விஜய் பிறந்த நாள் வருகிற ஜூன் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஏற்கனவே ஏப்ரல் 14ம் தேதி, கோட் படத்தில் இடம்பெற்ற விசில் போடு பாடல், பர்ஸ்ட் சிங்கிளாக வெளிவந்தது. எனவே, விஜய் பிறந்த நாளில் செகன்ட் சிங்கிள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற செப்டம்பர் 5ம் தேதி, விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது கோட் படம் ரிலீஸ் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

மிக நீண்ட இடைவெளிக்கு பின், ஏறக்குறைய 15 ஆண்டுகளுக்கு பிறகு, கோட் படத்தில் பிரசாந்த் நடித்திருக்கிறார். அதே போல் மைக் மோகனும் இந்த படத்தில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். 1980களில் வெள்ளி விழா நாயகனாக மோகன் தமிழ் சினிமாவில் வலம் வந்தவர். இப்போது கோட் படம் மூலம் மீண்டும் வந்துவிட்டார். இந்த படத்துக்கு பிறகு அவர் ராமராஜனை போலவே செகன்ட் இன்னிங்ஸ் வருவார் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில், கோட் படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகையர் சம்பளம் விவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் விஜய்க்கு ரூ. 200 கோடி சம்பளம் தரப்பட்டுள்ளது. படத்தின் இயக்குனர் வெங்கட்பிரபுவின் சம்பளம் ரூ. 18 கோடி எனக் கூறப்படுகிறது.

நடிகர் பிரசாந்த் சம்பளம் ரூ. 5 கோடி எனவும், மைக் மோகனின் சம்பளம் ரூ. 2 கோடி எனவும், படத்தின் நாயகி மீனாட்சி செளத்ரி சம்பளம் 2 கோடி எனவும் கூறப்படுகிறது. படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நடன இயக்குனர், நடிகர் மற்றும் டைரக்டர் பிரபுதேவாவின் சம்பளம் ரூ. 4 கோடி எனவும் கூறப்படுகிறது. மாஜி கதாநாயகி சினேகா சம்பளம் ரூ. 40 லட்சம் என்றும் தெரிய வந்துள்ளது.

சற்று முன்