- Advertisement -
Homeபொழுதுபோக்குதிரையரங்குகளில் மாஸ் காட்டும் புஷ்பா 2 - பின்னணி இசையமைத்த சாம் சிஎஸ் கோபம், உண்மையான...

திரையரங்குகளில் மாஸ் காட்டும் புஷ்பா 2 – பின்னணி இசையமைத்த சாம் சிஎஸ் கோபம், உண்மையான கலைஞனுக்கு மரியாதை, அங்கீகாரம் கிடைக்கலையே?

- Advertisement -

நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் புஷ்பா. பெரிய அளவில் ரசிகா்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம், பிளாக் பஸ்டர் மூவியாக வெற்றி பெற்றது. தொடர்ந்து புஷ்பா 2 படம் தற்போது வெளியாகி, தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்துக்கும் பாசிடிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ரிலீஸான முதல் நாளில் உலகம் முழுவதும் 275 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

புஷ்பா படத்தின் முதல் பாகத்துக்கு பாடல்கள் மற்றும் பின்னணி இசை என தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்தார். ஆனால் புஷ்பா 2ம் பாகத்துக்கு பாடல்களுக்கு மட்டுமே தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சாம் சிஎஸ் அமைத்துள்ளார். படத்தில் பின்னணி இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

- Advertisement -

ஆனால் புஷ்பா 2 படத்துக்கு பின்னணி இசை அமைத்தவர்கள் குறித்து படக்குழு தரப்பில் தெளிவான அறிவிப்பு ஆரம்பத்தில் இருந்தே இல்லை. தமன் பின்னணி இசையமைப்பதாக ஒரு தகவல் பரவியது. ஒரு நிகழ்ச்சியில் பேசிய தமனும், புஷ்பா 2 இசை பணிகள் எனக்காக காத்திருக்கிறது என்று பேசியிருந்தார்.

புஷ்பா 2 பிரமோசன் நிகழ்ச்சியில், பாடல்களுக்கு மட்டுமே இசையமைத்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கலந்துக்கொண்டார். மேடையில் பேசுகையில், நான் சரியான நேரத்துக்கு இசையமைத்து தருவதில்லை என்று என் மீது புகார் கூறுகின்றனர். என் மீது அன்பு இருக்கும் அளவுக்கு, புகார்களும் இருந்து வருகின்றன என்று குறிப்பிட்டு பேசினார்.

- Advertisement -

புஷ்பா 2 படத்தின் துவக்கத்தில் வரும் டைட்டில் கார்டில் இசை மற்றும் பின்னணி இசை தேவி ஸ்ரீ பிரசாத், கூடுதல் பின்னணி இசை சாம் சிஎஸ் என்று வருகிறது. அதனால் படத்தில் யார் யார் எந்த காட்சிகளுக்கு இசையமைத்தது என்ற குழப்பம் ரசிகர்களுக்கும், சினிமா விமர்சகர்களுக்கும் வருகிறது.

இதுகுறித்து இசையமைப்பாளர் சாம் சிஎஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இது தேவி ஸ்ரீ பிரசாத் படம்தான் என்றாலும் படத்தில் 90 சதவீத காட்சிகளுக்கு நான்தான் பின்னணி இசை அமைத்தேன். கிளைமாக்ஸ் சண்டை காட்சிக்கும் பின்னணி இசை அமைத்துள்ளேன். மூடி மூடி மறைத்தாலும் விதைகள் எல்லாம் மண்ணை முட்டி முட்டி முளைப்பது உயிரின் சாட்சி என்று பதிவிட்டுள்ளார். புஷ்பா 2 படக்குழுவினர், தன்னை பற்றி பேசாமலும், எந்த இடத்திலும் தனது பணி குறித்து குறிப்பிடாமலும் விட்டுவிட்டதால் தனது கோபத்தை இந்த பதிவின் மூலம் சாம் சிஎஸ் வெளிப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்