தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருக்கும் சமந்தா தமிழ் படங்களில் நடிப்பதை காட்டிலும் தெலுங்கு படங்களில் அதிகமாக நடித்த வருகிறார். ஏனெனில் கோலிவுட்டை காட்டிலும், டோலிவுட்டில் அவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு இருந்ததன் காரணமாகவே அவர் ஆரம்பம் முதலே பல்வேறு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே தமிழில் பெரிய அளவில் படங்கள் எதிலும் நடிக்காத சமந்தா தெலுங்கு சினிமாவின் பக்கமே தங்கிவிட்டார்.

ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தெலுங்கு நடிகரும், நாகர்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட அவர் அவரை விவாகரத்து செய்த பின்னரும் தொடர்ச்சியாக தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே மையோசிட்டிஸ் எனும் அரியவகை நோயின் காரணமாக அவதிப்பட்டு வரும் சமந்தா தற்போது அடுத்ததாக ஆறு மாதம் சினிமாவில் நடிப்பதிலிருந்து பிரேக் எடுத்துக்கொண்டு மேல் சிகிச்சை எடுத்துக் கொள்ள இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியது. அதன்படி இந்த சிகிச்சைக்கு முன்னதாக தற்போது இந்தோனேசியா சென்றுள்ள சமந்தா அங்கு தனது தோழியுடன் இருக்கும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

இந்த சுற்றுலா முடிந்த பிறகு அமெரிக்கா செல்லும் சமந்தா அங்கு தனது மையோசிட்டிஸ் நோய்க்கான சிகிச்சையை எடுத்துக் கொள்ளவுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக தற்போது மேல்சிகிச்சை செலவிற்காக அவர் 25 கோடி ரூபாய் கடனாக சக நடிகர் ஒருவரிடம் இருந்து வாங்கியதாக கூறப்படுகிறது. தெலுங்கு நடிகரான அவர் யார் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை என்றாலும் சமந்தா கடனாக பணம் பெற்ற தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ச்சியாக பல்வேறு படங்களில் பல ஆண்டுகளாக நடித்த வரும் சமந்தா தன்னிடம் பணம் இல்லாமலா இப்படி கடன் வாங்குகிறார்? என்று சிலர் கேள்வி எழுப்பி வந்தாலும் அவர் மேல் சிகிச்சைக்காகவே இந்த 25 கோடி ரூபாய் தெலுங்கு நடிகரிடம் இருந்து வாங்கியதாக கூறப்படுகிறது. தற்போது இந்தோனேசியா சென்றுள்ள சமந்தா மீண்டும் நாடு திரும்பிய பின்னர் உடனடியாக அமெரிக்கா சென்று அடுத்த கட்ட சிகிச்சையை மேற்கொண்டு அதன்பிறகு மீண்டும் முழு உடற்தகுதி பெற்று அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த இருப்பதாக கூறப்படுகிறது.





