- Advertisement -
Homeபொழுதுபோக்குலியோ படத்தில் என்னை ஏமாற்றி விட்டார்… இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீது இந்தி நடிகர் சஞ்சய்...

லியோ படத்தில் என்னை ஏமாற்றி விட்டார்… இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீது இந்தி நடிகர் சஞ்சய் தத் பகிரங்க குற்றச்சாட்டு!

- Advertisement -

இப்போது பெரிய நட்சத்திர நடிகர்கள் நடிக்கும் படங்கள் எல்லாமே பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா படங்களாக உருவாகின்றன. தமிழில் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி என எல்லா மொழிகளிலும் பான் இந்தியா படங்களை தரவே ஹீரோக்களும் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் விரும்புகின்றனர்.

ஏனெனில் ஒரு மொழியில் எடுத்த படத்தை பல மொழிகளில் டப்பிங் செய்து அந்த மொழி ரசிகர்களிடம் மத்தியிலும் படத்தை கொண்டு செல்கின்றனர். இதன்மூலம் பெரிய அளவில் படத்துக்கு லாபம் கிடைக்கிறது. இதற்காக தமிழில் உருவாகும் ஒரு படத்தில் மலையாளம் இந்தி தெலுங்கு மலையாள மொழி படங்களில் பிரபலமாக உள்ள நட்சத்திரங்களையும் நடிக்க வைக்கின்றனர்.

- Advertisement -

இந்த படங்கள் அந்தந்த மொழி மாநிலங்களில் வெளியாகும்போது அங்குள்ள நட்சத்திர ஹீரோவின் புகைப்படங்களை பெரிதாக போஸ்டர் அடித்து படங்களை விளம்பரப்படுத்துகின்றனர். அதனால் தமிழில் உருவான ஒரு படம் பான் இந்தியா படமாக மற்ற மொழிகளிலும் பெரிய அளவில் வரவேற்பும் பெறுகிறது. வசூலையும் குவித்து விடுகிறது.

அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டில் வெளியான நடிகர் விஜய் நடித்த லியோ படத்தில் இந்தி நடிகர் சஞ்சய் தத் நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் இந்தி நடிகர் அனுராக் காஷ்யப் மற்றும் இயக்குனர்கள் மிஷ்கின் அர்ஜூன் கௌதம் மேனன் திரிஷா பிரியா ஆனந்த் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.

- Advertisement -

இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் இந்தி நடிகர் சஞ்சய் தத் நடித்திருந்தார். லியோ படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெற்றாலும் விமர்சன ரீதியாக இந்த படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெறவில்லை. சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு விழாவில் இந்தி நடிகர் சஞ்சய் தத் கலந்துக்கொண்டார். அப்போது லியோ படத்தில் நடித்தது குறித்து வெளிப்படையாக விமர்சித்து பேசியிருக்கிறார்.

அந்த விழாவில் பேசிய நடிகர் சஞ்சய் தத் கூறியதாவது, லியோ என்ற படத்தில் நடிகர் விஜயுடன் நடித்தேன். அந்த படம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. ஆனால் அந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மீது எனக்கு கோபம். ஏனென்றால் அந்த படத்தில் பெரிய கேரக்டர் தராமல் என்னை அவர் வீணடித்து விட்டார் என்று நடிகர் சஞ்சய் தத் பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்