தமிழ் சினிமாவில் மிகவும் சீனியர் நடிகராக மதிக்கப்படுபவர் நடிகர் விஜயகுமார். எம்ஜிஆர் சிவாஜி காலத்தில், தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர். நடிகராக வருவதற்கு முன்பே, முத்துக்கண்ணு என்ற உறவினர் பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். அவருக்கு 2 மகள்கள், ஒரு மகன். அந்த மகன்தான் நடிகர் அருண் விஜய்.
சினிமாவில் நடிக்க வந்த பிறகு, ஒரு காலகட்டத்தில் நடிகை மஞ்சுளாவை காதலித்து 2வது திருமணம் செய்துக்கொண்டார். விஜயகுமார் – மஞ்சுளா தம்பதியின் மகள்கள் வனிதா விஜயகுமார், ப்ரீத்தா விஜயகுமார், ஸ்ரீதேவி விஜயகுமார். இவர்கள் 3 பேருமே சினிமாவில் நடித்துள்ளனர். ஆனால் முன்னணி நடிகைகளாக வர முடியவில்லை.
முதல் தாரம் முத்துகண்ணுவின் மகள்கள் இருவரும் டாக்டர்கள் என்ற நிலையில், அருண் விஜய் மட்டும்தான் தமிழ் சினிமாவில் நடித்துக்கொண்டு இருக்கிறார். துவக்கத்தில் இருந்தே அருண் விஜய் படங்கள் பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை. ஆனாலும், நல்ல நடிகராக பல படங்களில் அவர் நடித்திருக்கிறார் என்பதை மறுக்க முடியாது.
இந்நிலையில், டைரக்டர் பாலா இயக்கிய வணங்கான் படத்தில் முதலில் சூர்யா நடித்தார். ஒரு மாதத்துக்கு மேல் படப்பிடிப்பு நீடித்த நிலையில், சூர்யாவுக்கும் டைரக்டர் பாலாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அந்த படத்தில் இருந்து சூர்யா விலகிவிட்டார். அதன்பிறகு அந்த படத்தில் சூர்யா கேரக்டரில் நடிகர் அருண் விஜயை, பாலா நடிக்க வைத்துள்ளார்.
வணங்கான் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், படம் குறித்து பரவலான பாராட்டு கிடைத்து வருகிறது. பாலா தரமான சம்பவமாக வணங்கான் படத்தை உருவாக்கி இருக்கிறார். குறிப்பாக, சூர்யாவுக்கு தன்னை நிரூபித்து காட்டும் விதமாகவும், சூர்யா இந்த படத்தை மிஸ் பண்ணி விட்டோமே, என பீல் செய்யும் விதமாகவும் வணங்கான் படத்தை அவர் தந்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
அதே போல், வணங்கான் படத்தின் மிகப்பெரிய வெற்றியை அருண் விஜயும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார். அவரது சமீபத்திய படமான யானை உட்பட பல படங்கள் சரியாக ஓடாத நிலையில், வணங்கான் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றால், தனது தற்போதைய சம்பளம் ரூ. 5 கோடியை ரூ. 8 கோடியாக உயர்த்திவிடலாம் என்ற முடிவில் இருக்கிறார். வணங்கான் பெரிய அளவில் மாஸ் ஹிட் ஆனால், அருண் விஜய் சம்பளம் 10 கோடி ரூபாயாகவும் மாற வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.





