- Advertisement -
Homeபொழுதுபோக்குநன்றியை மறக்காத நடிகர் சரத்குமார், கேப்டன் மகன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் - அப்போ...

நன்றியை மறக்காத நடிகர் சரத்குமார், கேப்டன் மகன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் – அப்போ அவர் சொன்னதெல்லாம் பொய்யா? – ரசிகர்கள் அதிருப்தி

- Advertisement -

நடிகர் விஜயகாந்த், தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக இருந்தவர். தமிழக அரசியலில் தேமுதிக கட்சி தலைவராகவும் அசத்தியவர். எதிர்கட்சி தலைவராக அதிமுக அமைச்சரவையில் சட்டசபையில் அமர்ந்தவர். ஆனால் நோய்வாய்ப்பட்ட நிலையில், கடந்தாண்டு டிசம்பர் 28ம் தேதி மறைந்தார்.

அவரது இரண்டு மகன்களில் மூத்த மகன் விஜய பிரபாகரன், அப்பாவுக்கு பின் கட்சி பணிகளில் தன் அம்மா பிரேமலதாவுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகாவை எதிர்த்து போட்டியிட்டார். இதில் ராதிகா, விஜயபிரபாகரன் இருவருமே தோற்ற நிலையில், திமுக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் நடித்து வருகிறார். அவர் ஏற்கனவே சகாப்தம், மதுர வீரன் என 2 படங்களில் நடித்துள்ள நிலையில் இப்போது படைத்தலைவன் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து இப்போது பொன்ராம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற வெற்றிப் படங்களை தந்த பொன்ராம் அடுத்து எம்ஜிஆர் மகன், சீமராஜா, டிஎஸ்பி போன்ற பிளாப் படங்களை தந்ததால், அவரது இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் முன்வரவில்லை. இந்நிலையில் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் அவரது படத்தில் நடிக்கிறார்.

- Advertisement -

இந்த படத்தின் படபூஜை, விஜயகாந்தின் 72வது பிறந்த நாளில் நடந்தது. இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகர் சரத்குமார் நடிக்கிறார். புலன் விசாரணை படத்தில் சரத்குமாரை நடிகராக்கியதே விஜயகாந்த் தான், தனது 100வது படம் கேப்டன் பிரபாகரன் படத்திலும் சரத்குமாரை நடிக்க வைத்திருந்தார். அந்த நன்றியை மறக்காமல் இந்த படத்தில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனுடன் சரத்குமார் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் படைத்தலைவன் படத்தில் கேமியோ ரோலில் நடிக்க இருந்த மாஸ்டர் ராகவா லாரன்ஸ் அந்த படத்தில் நடிக்கவில்லை. மேலும் பொன் ராம் இயக்கத்தில் இந்த புதிய படத்தில் இரட்டை நாயகர்களில் ஒருவராக நடிக்க இருந்த ராகவா லாரன்ஸ் அதில் இருந்தும் விலகி விட்டதால் அந்த கேரக்டரில்தான் சரத்குமார் நடிப்பதாக தெரிய வந்துள்ளது. கதை விவாதம் நடந்துவரும் நிலையில் விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.

- Advertisement -

சற்று முன்