தமிழ் சினிமா நடிகர்களில் அதிக விலை கொண்ட காரை வைத்திருக்கும் நடிகர் ரஜினி, கமல், விஜய், அஜீத்குமார் அல்ல… மிக அதிகபட்சமான விலை கொண்ட கார் வைத்திருக்கும் ஒரே நடிகர் லெஜண்ட் சரவணன்தான் என்கின்றனர். தமிழகத்தின் மிக முக்கிய பிஸினஸ்மேன்களில் இவரும் மிக முக்கியமானவர்.
தமிழகம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் கிளைகள் கொண்ட சரவணா ஸ்டோர் நிறுவனத்தின் உரிமையாளராக லெஜண்ட் சரவணன், துவக்கத்தில் விளம்பர படங்களில் மட்டுமே நடித்தார். அதன்பிறகு சினிமா நடிகராகவும் மாறிவிட்டார். இவரது நடிப்பில் லெஜண்ட் என்ற டைட்டில் படம் வெளியானதால், லெஜண்ட் சரவணன் என இப்போது அழைக்கப்படுகிறார்.
இவரது சரவணா ஸ்டோர் நிறுவனங்களில் நூற்றுக்கான தொழிலாளர்கள் பணிசெய்து வருகின்றனர். அங்கு வைக்கப்பட்டுள்ள எல்இடி டிவிகளில் காலை முதல் இரவு வரை லெஜண்ட் படத்தில் லெஜண்ட் சரவணன் நடித்த பாடல் காட்சியை திரும்ப திரும்ப திரும்ப ஒளிபரப்பு செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.
ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்கு மேலாக இப்படி ஒரே பாடலை திரும்ப திரும்ப கேட்கும் நிலையில், சரவணா ஸ்டோர்ஸ் செல்லும் வாடிக்கையாளர்கள். ஒரு விதமான மன உளைச்சலுக்கு ஆளாகி வெளியேறி விடுகின்றனர். அந்த அளவுக்கு ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப கேட்பது, அவர்களை மனதளவில் பாதிக்கச் செய்கிறது.
ஆனால் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் காலை முதல் முதல் இரவு வரை அந்த பாடலை, திரும்ப திரும்ப கேட்டு ஒருவிதமான உளைச்சலில் தவிக்கின்றனர். காதுகளில் பஞ்சை வைத்து அடைத்துக்கொள்ள முடியாத ஒரு மோசமான சூழ்நிலையில் அங்கு பணிசெய்வதாக புகார் எழுந்துள்ளது.
இந்த சூழலில் கருடன் பட இயக்குநர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்க லெஜண்ட் சரவணன் தயாராகி வருகிறார். இந்த படத்தின் கதை டாப் நடிகர்களுக்கான கதை போல, மாஸ் ஆக இருக்க வேண்டும் என்று கூறிய லெஜண்ட் சரவணன், வழக்கமாக பெறும் சம்பளத்தை விட 3 மடங்கு சம்பளத்தை கொடுத்து இயக்குநர் துரை செந்தில்குமாரை திணற வைத்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.





