- Advertisement -
Homeபொழுதுபோக்கு110 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான சர்தார் 2 படத்துக்கு இப்படி ஒரு சிக்கலா? போட்ட...

110 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான சர்தார் 2 படத்துக்கு இப்படி ஒரு சிக்கலா? போட்ட காசை எடுக்க முடியாமல் தயாரிப்பாளர் கதறல்!

- Advertisement -

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் ஜப்பான் மெய்யழகன் படங்கள் வெளியாகின. இதில் ஜப்பான் அவரது 25வது படமாக இருந்தது. ஜோக்கர் குக்கூ படங்களின் இயக்குனர் ராஜூ முருகன் இயக்கிய ஜப்பான் படம் பெரிய அளவில் ஓடவில்லை.

ஆனால் மெய்யழகன் படம் ரசிகர்களின் வரவேற்பை கவனத்தை பெற்ற ஒரு படமாக இருந்தது. இதில் நடிகர் அரவிந்த் சாமி இதில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இதையடுத்து நடிகர் கார்த்தி நடிப்பில் சர்தார் 2 வா வாத்தியார் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக தயாராக இருக்கின்றன.

- Advertisement -

இதில் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான சர்தார் 2 படம் 90 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி உள்ளது. இதுவரை கார்த்தி நடித்த படங்களில் இதுதான் மிகப்பெரிய பட்ஜெட் படமாக இருக்கிறது. அதிலும் படத்தை எடுத்து முடிக்கும் போது 110 கோடி ரூபாய் வரை பட்ஜெட் எகிறி விட்டது. இதனால் படத்தின் தயாரிப்பாளர் அப்செட் ஆகி இருக்கிறார்.

ஆனாலும் டிஜிட்டல் வியாபாரம் சாட்டிலைட் உரிமம் என நான் தியேட்டரிக்கல் பிஸினஸ் மூலம் போட்ட முதலீட்டை எடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையில், சர்தார் 2 படத்துக்கு டிஜிட்டல் ரைட்ஸ் விலையாக ரூ. 60 கோடி சொல்லப்பட்டது. ஆனால் கேட்பதற்கு யாரும் இல்லை. ஜப்பான் படத்தை 22 கோடி ரூபாய் கொடுத்து வாங்கினோம். எதிபார்த்த வரவேற்பு இல்லை. சர்தார் படத்தை 18 கோடி ரூபாய் கொடுத்து வாங்கினோம்.

- Advertisement -

அதனால் சர்தார் 2 படத்தை அதிகபட்சம் 26 கோடி ரூபாய்க்கு வாங்கிக் கொள்கிறோம். அதற்கு மேல் விலை தர முடியாது என்று ஓடிடி நிறுவனங்கள் கட் அண்ட் ரைட்டாக கூறிவிட்டன. ஒவ்வொரு நடிகர் படத்துக்கும் வியாபாரத்தில் ஒரு அளவுகோல் வைத்துள்ள ஓடிடி நிறுவனங்கள், அந்த விலையை தாண்டி வருவதில்லை.

அதனால் இப்போது 110 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான சர்தார் 2 படத்துக்கு 60 கோடி ரூபாய் வரை டிஜிட்டல் ரைட்ஸ் பிஸினஸ் எதிர்பார்த்த படத்தயாரிப்பாளர் பலத்த அப்செட்டில் இருக்கிறார். 26 கோடி ரூபாய் மட்டுமே டிஜிட்டல் ரைட்ஸ் என்றால் மீதி 84 கோடி ரூபாய் வரை போட்ட காசை எடுக்க முடியுமா, என்ற குழப்பத்தில் படக்குழுவினரும் இருந்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்