- Advertisement -
Homeபொழுதுபோக்குபொங்கல் பண்டிகை ரிலீஸ், கார்த்தி நடித்த படம் வா வாத்தியார்; இதில் சத்யராஜ் நடிக்கும் கேரக்டர்?...

பொங்கல் பண்டிகை ரிலீஸ், கார்த்தி நடித்த படம் வா வாத்தியார்; இதில் சத்யராஜ் நடிக்கும் கேரக்டர்? லேட்டஸ்ட் அப்டேட் சும்மா அதிருதில்ல…

- Advertisement -

வருகிற 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி, இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்த வணங்கான் ஆகிய 3 படங்கள் ரிலீஸாகின்றன. இதையடுத்து தற்போது கார்த்தி நடித்துள்ள வா வாத்தியார் படமும் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள வா வாத்தியர் படத்தில் ஹீரோவாக நடிகர் கார்த்தி நடித்திருக்கிறார். இதில் எம்ஜிஆரின் தீவிர ரசிகராக கார்த்தி நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், ராஜ்கிரண் கிருத்தி ஷெட்டி ஆனந்தராஜ் சில்பா மஞ்சுநாத் கருணாகரன் ஜி எம் சுந்தர் ரமேஷ் திலக் பிஎல் தேனப்பன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

வா வாத்தியார் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா இந்த படத்தை தயாரித்துள்ளார். கங்குவா படத்தை தயாரித்ததும் இந்த நிறுவனம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யாவின் தம்பி கார்த்தி படத்தையும் இப்போது தயாரித்துள்ளது.

நீண்ட நாட்களுக்கு பின் இந்த படத்தில் சத்யராஜ் வில்லனாக நடித்துள்ளார். ஆரம்பத்தில் ரஜினி, கமல் படங்களில் வில்லனாக நடித்த சத்யராஜ் ஒரு கட்டத்துக்கு பிறகு நாயகனாகவும் பல படங்களில் நடித்தார். இப்போது குணச்சித்திர வேடங்களில் அதிகமாக நடித்து வருகிறார். ஆனால் இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் மீண்டும் சத்யராஜ் தோன்ற உள்ளார்.

மேலும் ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வருகிற பொங்கலுக்கு ரிலீசாக உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்திருக்கிறார். இதற்கிடையில் இந்த படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மேலும் சத்யராஜ் இந்த படத்தில் இரண்டு ரோல்களில் நடித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. டீசரில் ஒரு கெட்டப் தான் காட்டப்பட்டுள்ள நிலையில் இன்னொரு கெட்டப் சஸ்பென்ஸ்சில் வைக்கப்பட்டுள்ளது. சத்யராஜ் வில்லனாக நடித்த பல படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கின்றன. நீண்ட நாட்களுக்கு பின் மீண்டும் வில்லனாக சத்யராஜ் நடித்திருப்பது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

சற்று முன்