- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரசியல் குழாயடி சண்டை இனிதே ஆரம்பம்… பணக்கொழுப்பு என விஜயை விமர்சித்த நாம் தமிழர் கட்சி...

அரசியல் குழாயடி சண்டை இனிதே ஆரம்பம்… பணக்கொழுப்பு என விஜயை விமர்சித்த நாம் தமிழர் கட்சி சீமான், தக்க பதிலடி தந்த டிவிகே!

- Advertisement -

தமிழ்நாட்டை குடும்ப அரசியல் செய்து மோசமான ஆட்சி நடத்தி வரும் திமுகவுக்கு எதிராக தான் அரசியல் களத்தில் குதித்திருக்கிறேன் என கடந்தாண்டு விக்கிரவாண்டியில் நடந்த தவெக கட்சி அரசியல் முதல் மாநாட்டில் பகிரங்கமாக பேசினார் நடிகர் மற்றும் கட்சியின் தலைவர் விஜய். அரசியல் களத்தில் எங்களது எதிரி திமுகதான் என்றும் வெளிப்படையாக அறிவித்தார்.

ஆனால் திமுகவை காட்டிலும் விஜயின் அரசியல் வருகையை கடுமையாக எதிர்த்துக்கொண்டு இருப்பது நாம் தமிழர் கட்சியும், அதன் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமானும்தான். நடிகர் இயக்குனராக இருந்த சீமான், நாம் தமிழர் கட்சியின் தலைவராகவும் உள்ளார். துவக்கத்தில் தம்பி விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் என்று கூறியவர்தான் சீமான். ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு நாம் தமிழர் கட்சியை விட்டு விலகி முக்கிய மாவட்ட நிர்வாகிகளும், கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்து வருகின்றனர்.

- Advertisement -

இப்படி மொத்தம் மொத்தமாக விஜய் கட்சியில் தனது கட்சியினர் இணைவதால் நொந்து போன சீமான், வாய்க்கு வந்தபடி விஜயை மேடைகளில் விமர்சிக்க ஆரம்பித்து விட்டார். தம்பி இது பஞ்ச் டயலாக் அல்ல, நெஞ்சு டயலாக் என்றும் சவால் விட்டார். நீ அரசியலை கற்க வந்தவன், நான் அரசியலில் மூழ்கி முத்தெடுப்பவன் என்றும் மேடைகளில் பேசி வருகிறார்.

தற்போது ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேர்தல் வியூக வகுப்பாளர்களுடன் பேசிவரும் நடிகர் விஜய்க்கு பணக்கொழுப்பு என கடுமையான விமர்சித்து பேசியிருக்கிறார். இந்த விமர்சனத்தால் தவெக கட்சியினர் கடும் கோபத்தில் உள்ளனர்.

- Advertisement -

இதையடுத்து தவெக தலைமை வெளியிட்ட ஒரு அறிவிப்பில், மைக்கை நீட்டினால் கண்டபடி சீமான் உளறுகிறார் என பதிலடி தரப்பட்டுள்ளது. மேலும் சீமானுக்கு நடைமுறை அரசியலில் உள்ள யதார்த்தம் புரியவில்லை என்றும் தவெக தரப்பில் இருந்து சீமானை விமர்சித்துள்ளனர்.

மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் டெபாசிட் தொகையை இழப்பதையே தேர்தல் வியூகமாக கொண்டவர் அண்ணன் சீமான் என்றும் தவெக தரப்பில் கடுமையாக கிண்டலடித்து விமர்சித்துள்ளது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் உள்ள நிலையில் இப்போதே சீமானும் விஜயும் ஆரம்பித்து விட்டார்கள் என இணையத்தில், தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்