- Advertisement -
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பதாவது, மதுரையில் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் மரணத்திற்கு முதல்வர் விஜய் மன்னிப்பு கேட்பாரா? விசாரணைக்காக காவல் நிலையம் சென்ற எளிய மனிதர் உயிரோடு வீடு திரும்ப முடியாத கொடுமை நிகழ்கிறது. மக்களின் உயிரைப் பறிக்கும் இடமாக காவல் நிலையம் மாறிவிடக்கூடாது. கடந்த திமுக ஆட்சியில் காவல் மரணங்களின் போது ஸாரி வேண்டாம் நீதி வேண்டும் என்றார் விஜய். தம்முடைய ஆட்சியில் காவல் நிலையத்தில் ஒரு உயிர் பறி போனதற்கு என்ன நீதியை பெற்று தர போகிறார்? குற்றங்களில் சிக்கும் தவெக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அறிவுரை சொல்கிறார் முதல்வர். பாலகிருஷ்ணனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்திற்கு துயர் துடைப்பு நிதியை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று சீமான் கூறியிருக்கிறார்.





