- Advertisement -
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை சரண்யா பொன்னண்ணன் கூறியதாவது, நடிப்பை தாண்டி டெய்லரிங் தான் என்னுடைய ஃபேஷன். அதனால தான் என் வீட்டுக்கு மேலேயே டிஷாப் என்கிற ஒரு பேஷன் டிசைனிங் இன்ஸ்டிட்யூட் நடத்திட்டு வரேன். எனக்கு ரொம்ப பிடித்த டெய்லரிங் தொழிலை மத்தவங்களுக்கும் சொல்லிக் கொடுக்கணும். நிறைய பெண்களை முன்னேற்றம் செய்யணும் என்பது எனக்கு ரொம்ப நாள் ஆசை. இங்க திருமணத்துக்கு அப்புறம் நிறைய பெண்கள் வீட்லயே முடங்கிடுவாங்க. அவங்களை மாதிரி ஆட்கள் கூட எங்க நிறுவனத்துல சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டாங்க. பல தொழிலதிபர்களை உருவாக்கி இருக்கேன். அதுதான் என்னுடைய சாதனையாக நினைக்கிறேன் என்று நடிகை சரண்யா பொன்வண்ணன் கூறியிருக்கிறார்.





