பொதுவாக சினிமா நடிகர் நடிகைகளின் திருமண வாழ்க்கை என்பது பெரும்பாலும் திருப்திகரமாக சந்தோஷமாக அமைவது இல்லை. அதற்கு காரணம் அவர்கள் வளர்ந்த விதமும் வாழ்கின்ற சூழ்நிலையும்தான். பொருளாதார தேவைக்காக தனது கணவரை சார்ந்திருக்க வேண்டிய சூழல் மனைவிக்கு இருப்பதில்லை. அவரும் பெரிய நடிகையாக இருக்கிறார்.
அதே போல் குடும்பம் பிள்ளைகள் என மனைவியை சார்ந்திருக்க வேண்டிய சூழலும் மனநிலையும் பல நடிகர்களுக்கு இருப்பதில்லை. அதனால் விட்டுக்கொடுத்து போகும் மனப்போக்கும் அனுசரித்து வாழ வேண்டிய சூழலும் இல்லாததால் மிக விரைவில் நடிகர் நடிகைகள் விவாகரத்து என்ற முடிவுக்கு மிக எளிதாக வந்துவிடுகின்றனர்.
அதனால் தான் சில நடிகர்கள் நடிகைகள் எப்படியும் திருமண வாழ்க்கை தங்களது லைப் ஸ்டைலுக்கு ஒத்துவராது என்பதை முன்கூட்டியே தெரிந்துக் கொண்டு முரட்டு சிங்கிளாக வாழ்ந்து விடுகின்றனர். ஏனெனில் திருமணமான சில ஆண்டுகளில் விவாகரத்து என்ற சர்ச்சையில் சிக்கி விடக்கூடாது என்றும் கருதுகின்றனர்.
ஆனால் ஒரு சில நடிகர் நடிகைகள் காதல் திருமணம் செய்துக்கொண்டனர். அந்த வகையில் தமிழில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் ஹன்சிகா மோத்வானி. வேலாயுதம் ஒரு கல் ஒரு கண்ணாடி அரண்மனை அரண்மனை 2 போகன் ரோமியோ ஜூலியட் எங்கேயும் காதல் என பல படங்களில் அவர் நடித்திருக்கிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு சோஹைல் கத்தூரியா என்ற தொழிலதிபரை நடிகை ஹன்சிகா மோத்வானி காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் திருமணமான 2 ஆண்டுகளிலேயே இருவருக்கும் மணவாழ்க்கை கசந்த நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் அவர்கள் சட்டப்படியாக விவகாரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
தனது மணவாழ்க்கை முறிவு குறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ஹன்சிகா மோத்வானி கூறியதாவது, என் குடும்பம் எனக்கு எதற்காகவும் அழுத்தம் கொடுக்கவில்லை. நான் எதற்காகவும் வருத்தப்படவில்லை. தவறான ரயிலில் ஏறிய பின்பு கஷ்டப்படுவதை விட அதில் இருந்து இறங்கி விடுவது தான் சிறந்தது. அதனால் இது பரவாயில்லை. நான் வருத்தப்படவில்லை. குடும்பத்தின் ஆதரவு இருக்கிறது. தற்போது நான் மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன் என்று ஹன்சிகா மோத்வானி கூறியிருக்கிறார்.





