- Advertisement -
Homeபொழுதுபோக்குநானும் சீதாவும் இப்போதும் நல்ல நண்பர்களாக தான் இருக்கிறோம், விசேஷ நிகழ்ச்சிகளில் அடிக்கடி சந்திக்கிறோம் -...

நானும் சீதாவும் இப்போதும் நல்ல நண்பர்களாக தான் இருக்கிறோம், விசேஷ நிகழ்ச்சிகளில் அடிக்கடி சந்திக்கிறோம் – இப்படி சொன்னது நடிகர் பார்த்திபன் அல்ல… என்ன கொடும சார் இது?

- Advertisement -

நடிகை சீதா தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணியில் இருந்தவர். கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்திக், அர்ஜூன், ராமராஜன் என முன்னணி நடிகர்களுடன் பல வெற்றிப் படங்களில் நடித்தவர். புதிய பாதை படத்தில் நடித்த போது நடிகர் பார்த்திபனை காதல் திருமணம் செய்துக்கொண்டார்.

இருவரும் 10 ஆண்டுகளுக்கு மேல் ஒற்றுமையாக குடும்ப வாழ்க்கை நடத்திய நிலையில் 2 பெண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகினர். ராதாகிருஷ்ணன் என ஒரு மகனை தத்தெடுத்தும் வளர்த்தனர். ராமன் சீதை போல, பார்த்திபன் சீதா தம்பதி ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாய் கூறப்பட்ட அவர்கள், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தது சினிமா வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் பலத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

பார்த்திபனை விட்டு விலகிய சீதா மதுர, ஆதி உள்ளிட்ட சில படங்களில் அம்மா, அக்கா நடித்தார், சினிமாவில் பழைய வரவேற்பு கிடைக்காத நிலையில் பிறகு டிவி சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார். மத்திய வயதில் அழகான நடிகைகளுக்கு சீரியல்களில் பலத்த வரவேற்பு கிடைக்கும் என்பதால் சீதாவும் பல சீரியல்களில் நடித்தார்.
அப்போது சீரியலில் உடன் நடித்த சதீஷ் என்பவருக்கும், சீதாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டு, 2010ம் ஆண்டில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் என்றும், அதன்பிறகு ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து விட்டனர் என்றும் தகவல்கள் பரவியது. இப்போது பார்த்திபன், சதீஷ் என தனது 2 கணவர்களையும் பிரிந்து சீதா தனியாக வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து சீரியல் நடிகர் சதீஷ் ஒரு நேர்காணலில் கூறியிருப்பதாவது, நானும் சீதாவும் நல்ல நண்பர்கள் என்பதுதான் உண்மை. நாங்கள் திருமணம் செய்துக்கொண்டோம், ஒன்றாக வாழ்ந்தோம், பிரிந்து விட்டோம் என்பதெல்லாம் கட்டுக்கதை. இது எங்களுடன் நடித்த நடிகர், நடிகைகள் சின்னத்திரை வட்டாரத்தில் அனைவருக்கும் தெரியும்.

நான் சீதாவுடன் சீரியலில் நடிக்கும் போது அவருக்கு விவாகரத்து ஆகி விட்டது. சீதாவுடன் நட்பு ஏற்படும் முன்பே, என் மனைவி பிள்ளைகளுடன் என்னை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். நான் சீதாவை பொருளாதார ரீதியாக ஏமாற்றி விட்டேன் என்பதெல்லாம் ஆதாரமே இல்லாத வதந்தி. இப்போதும் சீதா என் நண்பர்தான். என் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் அவர் வருவார், நாங்கள் இப்போதும் அதே நட்புடன் சந்தித்துக் கொள்கிறோம், என்று சதீஷ் கூறியிருக்கிறார்.

சற்று முன்