- Advertisement -
Homeபொழுதுபோக்குமணி சார் இந்த முறை தைய்ய தைய்யா பாடலை பிளைட்டுக்கு மேல நின்னு ஆடனும்... மேடையில்...

மணி சார் இந்த முறை தைய்ய தைய்யா பாடலை பிளைட்டுக்கு மேல நின்னு ஆடனும்… மேடையில் ஷாருக்கான் – மணிரத்னம் இடையே நடந்த சுவாரஸ்ய உரையாடல்…

- Advertisement -

தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவில், ஆகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார் மணிரத்னம். தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தியிலையும் படம் இயக்கிய அவர், அங்கே வெற்றிக் கொடி நாட்டினார். உலகம் போற்றும் இயக்குனராக இருக்கும் மணிரத்னத்திற்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. இதுவரை ஆறு முறை தேசிய விருதை பெற்றிருக்கும் அவர், திரைத்துறையில் தயாரிப்பாளராகவும் மிளிர்கிறார்.

தமிழில் பகல் நிலவு திரைப்படத்தை தொடங்கி, பொன்னியின் செல்வன் திரைப்படம் வரை அவரது வெற்றிகள் ஏராளம். ஒரு காலகட்டத்திற்கு தகுந்தார் போல் திரைப்படத்தை எடுக்கும் மணிரத்னத்தை, இங்கு ட்ரெண்ட் ஷெட்டர் என்றே கூறலாம். கமல்ஹாசனுக்கு நாயகன், ரஜினிகாந்த்துக்கு தளபதி, ஷாருக்கானுக்கு உயிரே என பிரம்மாண்ட வெற்றியை கொடுத்திருக்கிறார் மணிரத்னம்.

- Advertisement -

பொன்னியின் செல்வன் நாவலை பலரும் இயக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்த வேளையில், அதனை திரையில் செய்து காட்டினார் அவர். படத்தின் மீது பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், பொன்னியின் செல்வன் அவர் காட்சிப்படுத்தியிருந்த விதம் வரவேற்பையே பெற்றது. அது மட்டுமல்லாமல் பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூலிலும் சக்கை போடு போட்டது.

இந்த நிலையில் தற்போது அவர் கமல்ஹாசன் உடன் 35 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்து இருக்கிறார். இந்த படத்திற்கு தக் லைஃப் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சமீபத்தில் வீடியோ ஒன்று வெளியானது. அதில் கமல்ஹாசன் தன்னை ரங்கராய சக்திவேல் நாயக்கன் என்று அறிமுகப்படுத்திக் கொள்ளும் வகையில் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்தத் திரைப்படத்தில் திரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கௌதம் கார்த்திக், மலையாள நடிகர் ஜோஜூ சுரேஷ் என ஒரு மிகப்பெரிய பட்டாளமே நடிக்கிறது.

- Advertisement -

மல்டி ஸ்டார் படமாக இது உருவாக இருக்கிறது. இந்த நிலையில் சி என் என் தொலைக்காட்சி சார்பில் மும்பையில் நடைபெற்ற விழாவில், மணிரத்னம் பங்கேற்றார். முன்னாடி நட்சத்திரங்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், ஷாருக்கானுக்கு இந்தியன் ஆப் தி இயர் வழங்கப்பட்டது. விருதைப் பெற்றுக் கொண்ட ஷாருக்கானிடம் நெறியாளர், அடுத்து மணிரத்னம் உடன் எப்போது இணையப் போகிறீர்கள் என கேள்வி கேட்டார். இது குறித்து பேசிய ஷாருக்கான்,

என்ன மணி சார் இப்படி கேள்வி கேட்கிற நிலைமைக்கு கொண்டு வந்துட்டீங்களே. நான் எப்போது மீண்டும் தைய தைய பாடலுக்கு நடனம் ஆட போகிறேன். இந்த முறை பிளைட்டின் மேல் தைய தைய பாடல் இருப்பது போல் காட்சி வையுங்கள் என்று கூறினார். உடனே மணிரத்னம் நானே பிளைட் வாங்குகிறேன் என்று கூற, அந்த பிளைட் மிகத் தொலைவில் இல்லை என்று நக்கலாக பேசினார் ஷாருக்கான். இல்லை அந்த பிளைட் தரையிறங்கும் என்று சிரித்தவாறே பதில் கூறினார் மணிரத்னம். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்