நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா அண்ணாத்த தர்பார் லால் சலாம் வேட்டையன் கூலி போன்ற சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. ரசிகர்களுக்கும் இந்த படங்கள் பெரிய ஏமாற்றத்தை தந்தது. குறிப்பாக கூலி படம் 500 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தாலும் வணிக ரீதியான வெற்றி என்றாலும் அந்த படம் கடும் விமர்சனங்களை சந்தித்தது.
இதற்கிடையே கடந்த 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் படம் ரஜினிகாந்துக்கு சூப்பர் கம்பேக் தந்தது. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் டைரக்ட் செய்திருந்தார். படத்துக்கு அனிருத் இசையமைத்து இருந்தார். பாட்ஷா படத்துக்கு பிறகு இந்த படம் ரஜினிக்கு ஒரு மாஸ் கம்பேக் கொடுத்தது என்பதால் இந்த படத்தை 2ம் பாகமாக தயாரிக்க சன் பிக்சர்ஸ் முன்வந்தது.
இதுவரை தனது எந்த படத்திலும் 2ம் பாகத்தில் நடிக்காத நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க சம்மதித்தார். அத்துடன் பாகுபலி 2 பொன்னியின் செல்வன் 2 இந்தியன் 2 விடுதலை 2 என பல படங்கள் 2 பாகங்களாக வெளியாகும் சூழலால் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவும் ரஜினிகாந்த் ஓகே சொல்லி விட்டார்.
கடந்த ஓராண்டுக்கு மேலாக ஜெயிலர் 2 படப்பிடிப்பு சென்னை கேரளம் ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வந்த நிலையில் இந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைய உள்ளது. இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா கன்னட நடிகர் சிவராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
மேலும் ரம்யா கிருஷ்ணன் யோகிபாபு மிர்ணா தாகூர் விஜய் சேதுபதி எஸ்ஜே சூர்யா போன்றவர்களும் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிக்கிறார். இன்னும் சில தினங்களில் சென்னையில் துவங்கும் ஜெயிலர் 2 இறுதிகட்ட படப்பிடிப்பில் ஷாருக்கான் ரஜினிகாந்த் இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.
இதற்கிடையே ஜெயிலர் 2 படத்தில் நடிகர் ஷாருக்கான் போலீஸ் உயரதிகாரி கேரக்டரில் நடிப்பதாகவும் 10 நாட்கள் வரை அவர் கால்ஷீட் தந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் ஓய்வு பெற்ற போலீஸ் ஜெயிலர் கேரக்டரில் நடித்திருந்தார். ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் போலீஸ் உயரதிகாரி ஷாருக்கான் என்றால் ரஜினி கேரக்டர் என்ன என்பது குறித்து அவரது ரசிகர்கள் கடும் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.





