- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னோட தங்கச்சியே என்னைய ஏமாத்திட்டாள், சொந்த வீடு கூட இல்ல, விக்கிபீடியால போட்ருக்குறதுலாம் உண்மையா?- கண்...

என்னோட தங்கச்சியே என்னைய ஏமாத்திட்டாள், சொந்த வீடு கூட இல்ல, விக்கிபீடியால போட்ருக்குறதுலாம் உண்மையா?- கண் கலங்கிய ஷகீலா!

- Advertisement -

ஒரு காலகட்டத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் கவர்ச்சி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் ஷகீலா. குறிப்பாக மலையாளத்தில் டாப் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இவரது மார்க்கெட் இருந்தது. இவர் மீது பல நெகட்டிவ் விமர்சனங்கள் வலம் வந்தாலும் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் பங்குபெற்ற பிறகு இவர் மீதுள்ள பார்வை மாறியது. பல ரசிகர்கள் ஷகீலாம்மா என்று பாசமாக அழைக்கத் தொடங்கினார்கள்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ஷகீலா, மிகவும் கவலையளிக்கும் சில விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அதாவது “ஒரு நாளுக்கு 4 லட்சம் எல்லாம் ஒரு காலகட்டத்தில் சம்பாதித்தேன். ஆனால் என்னுடைய பணத்தை எல்லாம் எனது தங்கை எடுத்துக்கொண்டு போய்விட்டார். வீட்டில் பணம் வைத்தால் வருமான வரி சோதனையில் பிரச்சனை வரும் என கூறி எனது பணத்தை எடுத்துக்கொண்டு போனார்.

ஆனால் போனவர் திரும்ப வரவேயில்லை. மறுபடியும் பூஜ்ஜியத்தில் இருந்து என் வாழ்க்கையை தொடங்கினேன். விக்கிபீடியாவில் குறிப்பிட்டிருப்பது போல் எனக்கு சொந்த வீடோ காரோ எல்லாம் இல்லை” என மிகவும் வருத்தத்துடன் பகிர்ந்துகொண்டுள்ளார். இந்த பேட்டி ரசிகர்கள் பலரின் இதயங்களை உருகவைத்துள்ளது.

ஷகீலாவை பலரும் கவர்ச்சி திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார் என்று நினைத்து வருகின்றனர். ஆனால் பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாப்பாத்திரத்தில் கூட நடித்துள்ளார். தற்போது சில யூட்யூப் சேன்னல்களில் நிருபராக பலரையும் பேட்டி எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் ஷகீலா தனக்கு சொந்த வீடு கூட இல்லை எனவும் தனது சொந்த தங்கையே தன்னை ஏமாற்றிவிட்டார் எனவும் கூறியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

சற்று முன்