- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினியுடன் மீண்டும் இணைகிறாரா ஷங்கர்?.. அதுவும் வரலாற்று கதையிலா?

ரஜினியுடன் மீண்டும் இணைகிறாரா ஷங்கர்?.. அதுவும் வரலாற்று கதையிலா?

- Advertisement -

தர்பார் அண்ணாத்த ஆகிய படங்களின் தோல்வியை அடுத்து ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்துள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். படத்துக்கு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் ரஜினியின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

இந்த படத்தை அடுத்து அவர் ஜெய் பீம் படம் இயக்குநர் தா.செ. ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். படத்திற்கான பூஜை வரும் 26ஆம் தேதி நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான லுக் டெஸ்ட் சமீபத்தில் நடந்து முடிந்தது. படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படமும் ஜெய் பீம் போலவே உண்மை கதையை அடிப்படையாக வைத்து உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் இஸ்லாமிய காவல் துறை அதிகாரியாக ரஜினி நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதற்கிடையே தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் என்ற கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். அந்த படமும் லைகாவின் தயாரிப்பில் உருவாக்கியிருக்கிறது அதுவும் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்தப் படங்களை முடித்த பிறகு அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். அந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் என பேச்சுக்கள் அதிகம் ஓடிக்கொண்டிருக்கின்றன. இப்படி ரஜினிகாந்த் வரிசையாக தனது லைன் அப்களை வைத்திருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் அவரது 172வது படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி மதுரை எம்பியும், எழுத்தாளருமான வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலை இயக்குநர் ஷங்கர் படமாக்க திட்டமிட்டு இருக்கிறார். இதில் ரஜினிகாந்தை நடிக்க வைக்க அவர் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று யோசனையில் இருப்பதாககூறப்படுகிறது. அப்படி நடிக்கும் பட்சத்தில் அந்த படம் மிகப்பெரிய ஹிட் அடிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழந்துள்ளது. அதே சமயம் வேள்பாரி படத்தில் எந்த கதாபாத்திரத்தில் ரஜினிகாந்தை நடிக்க வைப்பார் என்ற கேள்வியும் ரசிகர்களிடமும், வேள்பாரி வாசகர்களிடமும் எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்