- Advertisement -
Homeபொழுதுபோக்குஅங்கிள் என்று சொல்லாமல் அப்படி சொல்ல சொல்றீங்களா? - தனது ஸ்டைலில் கமெண்ட் அடித்த நடிகர்...

அங்கிள் என்று சொல்லாமல் அப்படி சொல்ல சொல்றீங்களா? – தனது ஸ்டைலில் கமெண்ட் அடித்த நடிகர் மன்சூர் அலிகான்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் மன்சூர் அலிகான். ஆரம்பத்தில் சில படங்களில் நடன கலைஞர்கள் குழுவில் அவரும் ஒருவராக குரூப் டான்ஸராக இருந்தார். பிறகு பல படங்களில் வில்லன்களில் அடியாட்களில் ஒருவராகவும் நடித்திருக்கிறார். கேப்டன் பிரபாகரன் படம் மூலம் வீரபத்ரன் என்ற கேரக்டரில் நடித்து வில்லன் நடிகராக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

நடிகர் மன்சூர் அலிகானுக்கு தனது 100வது படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பளித்து அவரது சினிமா வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட்டவரே கேப்டன் விஜயகாந்த் தான். அதனால் அன்று முதல் இன்று வரை கேப்டன் என்றாலே மன்சூர் அலிகான் அவ்வளவு மரியாதை தருபவராக இருக்கிறார். கேப்டன் மீது அளவு கடந்த அன்புடன் இப்போதும் இருக்கிறார்.

- Advertisement -

அதே போல் சினிமா நடிகர் என்ற எந்த பந்தாவும் இமேஜூம் பார்க்காத ஒரு யதார்த்தமான மனிதராகவும் அவர் இருப்பது ரசிகர்கள் மத்தியில் அவர் மீதான ஒரு நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சினிமா நடிகர் காட்டும் வெட்டி பந்தா பில்டப் எதுவும் மன்சூர் அலிகானிடம் காண முடியாது. அவர் சுயரூபம் எப்படியோ அதை தான் பொதுவெளியில் வெளிப்படையாக பேசி வருகிறார்.

அரசியல் களத்தில் நடிகர் மன்சூர் அலிகான் ஆர்வமாக இருந்து வருகிறார். கடந்த பார்லிமென்ட் தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார். சினிமா குறித்தும் அரசியல் குறித்தும் பொது பிரச்னைகள் குறித்தும் தன் கருத்துகளை ஓபனாக பேசக்கூடியவர். சமீபத்தில் நடிகர் விஜய், தமிழக முதல்வர் ஸ்டாலினை அங்கிள் என்று அழைத்தது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

சமீபத்தில் இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான் கூறியதாவது, அங்கிள் என்று சொன்னால் அதில் என்ன தப்பு? அங்கிள் என்று சொல்கிற அந்த வயசு. அவர் சொல்கிறார். சின்ன பையன்ல இருந்து அவரை பார்க்கிறார். அவங்க படங்களில் நடிச்சிருக்கார். கூட இருந்திருக்காங்க. அதுல என்ன தப்பை கண்டுபிடிச்சிட்டீங்க?

அங்கிளை அங்கிள்ன்னு சொல்லாம கிராண்ட் பா கிராண்ட் பா சோ கிராண்ட் பா என்று சொல்ல சொல்றீங்களா? அவர் ஏதோ பேசறார். பேசற ப்ளோவ்ல அப்படி சொல்றார். ஆட்சி செய்கிறவர்களே தான் எப்பவும் ஆட்சி செய்ய வேண்டுமா? அது என்ன சட்டமா, புதுசா ஒருத்தர் யாரும் வரக்கூடாதா? என்று நடிகர் மன்சூர் அலிகான் அந்த நேர்காணலில் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்