நடிகர் விஜய் இப்போது கோட் ( கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம்) என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் இலங்கையில் நடக்க உள்ளது. இதற்காக வெங்கட்பிரபு ஏற்கனவே இலங்கை சென்று, லோகேஷன்களை தேர்வு செய்து வருகிறார்.
விஜய் தற்போது சென்னையில் இருக்கிறார். நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி விஜய், கண்கலங்கி அழுதார். அடுத்து நெல்லையில், மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை நேரில் சென்று வழங்கினார்.அது மீடியாவில் செம டிரண்டிங் ஆனது.
இப்போது விஜயின் அம்மா, ஷோபா சந்திரசேகர் தனது மருமகளுடன் எடுத்து போட்டிருக்கும் ரீல்ஸ் ஒன்று செம வைரலாகி வருகிறது. அதில் ஷோபா சந்திரசேகர் மற்றும் இரு பெண்கள் அருகில் இருக்க, தனது மருமகள் பாடும் பாட்டுக்கு இவர் கேள்வி கேட்டு, உடல் அசைவு காட்டி முகபாவனைகளை தெறிக்க விடுகிறார்.
நடிகர் விஜயின் பெற்றோர் இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர், அவரது மனைவி ஆகியோர் துபாய் சென்றுள்ளனர். அங்கு ஷோபாவின் சகோதரர் எஸ்என் சுரேந்தரின் மகள் பல்லவி வினோத்குமார் வீட்டுக்குச் சென்றுள்ளனர். எஸ்என் சுரேந்தர்தான் விஜயின் தாய் மாமா. அவரது மகள்தான் பல்லவி. அவர்தான் விஜய்க்கு முறைப்பெண். ஆனால் சங்கீதாவை விஜய் திருமணம் செய்துக்கொண்டதால், பல்லவி வினோத்குமாரை மணந்து, துபாயில் செட்டில் ஆகி விட்டார்.
சமீபத்தில் தனது மாமா, அத்தை என குறிப்பிட்டு அவர் இன்ஸ்டாகிராமில் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அப்போதுதான் அவர் விஜயின் தாய்மாமா எஸ்என் சுரேந்தர் மகள் என்பதே பலருக்கும் தெரிய வந்தது. இப்போது அவர்களது வீட்டில்தான் ஷோபா, சந்திரசேகர் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஷோபா சந்திரசேகருடன், மருமகள் பல்லவி வினோத்குமார் ஒரு ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் ஏன் ஸ்கூல் போகணும், ஏன் காலேஜ் போகணும், ஏன் கல்யாணம் பண்ணனும்? என்று கேள்வி கேட்பது போல, பதில் சொல்வது போலவும் அந்த ரிலீஸ் சோஷியல் மீடியாவில் செம வைரலாகி வருகிறது.





