- Advertisement -
Homeபொழுதுபோக்குகூலி படம் ஏற்படுத்திய மாற்றம், அதிரடி முடிவு எடுத்த நடிகை ஸ்ருதிஹாசன் - இயக்குனர்கள் இந்த...

கூலி படம் ஏற்படுத்திய மாற்றம், அதிரடி முடிவு எடுத்த நடிகை ஸ்ருதிஹாசன் – இயக்குனர்கள் இந்த சான்ஸை பயன்படுத்திக்குவாங்களா?

- Advertisement -

வழக்கமாக தமிழ் சினிமாவில் அதிகளவில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றவர்கள் பிற மொழி நடிகைகளாக தான் இருக்கின்றனர். குறிப்பாக ஆந்திரா கர்நாடகா கேரளா என பிற மாநிலங்களை சேர்ந்த நடிகைகள்தான் தமிழ் சினிமாவில் கதாநாயகிகளாக அன்று முதல் இன்று வரை ஜெயித்துக்கொண்டே இருக்கின்றனர்.

அதே போல் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மும்பை நடிகைகள் பலரும் தமிழ் சினிமாவில் நாயகியாக நடித்து பெரிய அளவில் வரவேற்பை பெறுகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக தமிழில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிப்பவர்கள் வடமாநில இந்தி நடிகைகளாக தான் பெரும்பாலும் இருக்கின்றனர்.

- Advertisement -

ஆனால் தமிழ்நாட்டை சேர்ந்தவர் நடிகை ஸ்ருதிஹாசன். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் நடிகர் கமல்ஹாசன் மூத்த மகள். நன்றாக பாடும் திறமை உள்ளவர். அழகும் நடிப்பாற்றலும் நிறைந்தவர். ஆனால் அவரை தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடவில்லை. அதனால் அவர் இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நிறைய நடித்தார்.

தமிழில் ஸ்ருதிஹாசன் ஏஆர் முருகதாஸ் இயக்கிய ஏழாம் அறிவு என்ற படம் மூலம் அறிமுகமாகனார். இதில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தொடர்ந்து தனுஷூக்கு ஜோடியாக 3 விஜய்க்கு ஜோடியாக புலி அஜீத்குமாருக்கு ஜோடியாக வேதாளம் விஷாலுக்கு ஜோடியாக பூஜை மற்றும் சூர்யா நடித்த சிங்கம் 3 உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

- Advertisement -

ஆனால் தமிழில் அவருக்கு பெரிய வரவேற்பும் ஆதரவும் கிடைக்கவில்லை. இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி உள்ள கூலி படத்தில், சத்யராஜூக்கு மகள் கேரக்டரில் நடிகை ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார். இந்த படத்தின் பிரமோசன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் நடிகை ஸ்ருதிஹாசன் அதிக நாட்களை ஒதுக்கி இருக்கிறார்.

இந்தி தெலுங்கு மலையாளம் கன்னடம் என பிற மொழிகளை சேர்ந்த நடிகைகள் பலரும் தமிழ் சினிமாவில் பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில், நம்மால் ஏன் தமிழில் நிலைத்திருக்க முடியாது என்ற அதிரடி கேள்வி எழுந்த நிலையில், இனி தமிழில் அதிக கவனம் செலுத்துவது என்ற முக்கிய முடிவுக்கு நடிகை ஸ்ருதிஹாசன் வந்திருக்கிறார். அதனால் இனி தமிழில் அதிக படங்களில் நடிக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். அதனால் தமிழ் இயக்குனர்கள் இந்த 2வது சுற்றில் நடிகை ஸ்ருதிஹாசனை தங்களது படங்களில் நடிக்க வைக்க முயற்சிக்கலாம்.

- Advertisement -

சற்று முன்