- Advertisement -
Homeபொழுதுபோக்குகட்டிப்பிடித்த விவகாரத்தில் விஜய் சேதுபதி மீது ஆவேசப்பட்ட பிரபல நடிகை, ட்ரெயின் படத்துக்காக டைரக்டர்...

கட்டிப்பிடித்த விவகாரத்தில் விஜய் சேதுபதி மீது ஆவேசப்பட்ட பிரபல நடிகை, ட்ரெயின் படத்துக்காக டைரக்டர் மிஷ்கின் இந்த வேலையை கச்சிதமா பார்த்துட்டாரே…?

- Advertisement -

இயக்குனர் மிஷ்கின் அவர் இயக்கிய படங்களால், ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்து கவனிக்க வைத்தவர். குறிப்பாக அவரது இயக்கத்தில் வெளிவந்த சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட பல படங்கள் மிஷ்கினின் பெயர் சொல்லிய படங்களாக இருந்தன. மிஷ்கின் வேறுபட்ட சிந்தனையில் வித்யாசமான கதை களத்தில் படங்களை தருபவர்.

குறிப்பாக துப்பறிவாளன் படத்தில் அவர் எடுத்துக்கொண்ட கதைக்களமும், அதில் டிடெக்டிவ் கனியன் பூங்குன்றன் கேரக்டரில் விஷால் கேரக்டரில் காட்டிய விதமும், வில்லன் வினயின் கொடூர நடிப்பும் தமிழ் சினிமா ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தது. குறிப்பாக இந்த படத்தில் வயதான கேரக்டரில் வில்லனாக நடித்திருந்தார் இயக்குனர் மற்றும் நடிகர் கே பாக்யராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் மிஷ்கின் அசத்திக்கொண்டு வருகிறார். குறிப்பாக ஓ நந்தலாலா, சவரக்கத்தி, லியோ, மாவீரன் போன்ற படங்களிலும் மிஷ்கின் நடிப்பில் தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தார். அதிலும் சவரக்கத்தி படத்தில் கதாநாயகனாக இயக்குனர் ராம், வில்லனாக மிஷ்கின் என்ற வேறுபட்ட கதைக்களத்தில், இந்த படம் காமெடி கலந்த ஆக்சன் படமாகும்.

இப்போது ட்ரெயின் என்ற படத்தை, மிஷ்கின் இயக்கி வருகிறார். 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்த படத்தை தாணு தயாரித்திருக்கிறார். இதில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் திருநங்கைகள் குறித்த ஒரு பாடலை, பிரபல நடிகை, பாடகி மற்றும் நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் பாடியிருக்கிறார். ஆனால் அவர் இந்த படத்தில் பாடியதற்கு பின்னால் ஒரு தரமான சம்பவம் இருக்கிறது.

- Advertisement -

லாபம் என்ற படத்தில் விஜய் சேதுபதியுடன் ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். அப்போது கொரோனா காலகட்டம் என்பதால், ஸ்ருதிஹாசன் சமூக இடைவெளியை பின்பற்றியுள்ளார். ஆனால் நடிகர் விஜய் சேதுபதி வழக்கம்போல் மற்றவர்களை கட்டிப்பிடித்து தன் அன்பை வெளிப்படுத்தி உள்ளார். இதற்கு ஆட்சேபம் தெரிவித்த நடிகை ஸ்ருதிஹாசன், அந்த படத்தில் நடிக்க மறுத்து பாதியில் வெளியேறி விட்டார்.

இனிமேல் விஜய் சேதுபதி நடிக்கும் படங்களில் அவருடன் நடிக்கப் போவது இல்லை என்று ஸ்ருதிஹாசன் முடிவெடுத்திருப்பதாக அப்போது தகவல் வெளியாகி பரபரப்பானது. ஆனால் இப்போது விஜய் சேதுபதி நடித்துள்ள ட்ரெயின் படத்துக்காக, ஸ்ருதிஹாசன் ஒரு பாடலை பாடி தந்துள்ளார். இதற்கு காரணம், மிஷ்கின்தான் என்றும் தெரிய வந்துள்ளது. மகாராஜா படம் தந்த மாஸ் வெற்றியால், அடுத்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கவும் ஸ்ருதிஹசன் தயாராகி விடுவார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

- Advertisement -

சற்று முன்