- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்படி ஒரு கேரக்டரில் நடிக்கப் போறது கமல் மகள் ஸ்ருதிஹாசனா?, இதை கமல்ஹாசனே ஒத்துக்க...

இப்படி ஒரு கேரக்டரில் நடிக்கப் போறது கமல் மகள் ஸ்ருதிஹாசனா?, இதை கமல்ஹாசனே ஒத்துக்க மாட்டாரே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் உலக நாயகன் என போற்றப்படும் நடிகர் கமல்ஹாசனின் மகள் நடிகை ஸ்ருதிஹாசன். நடிகை, பாடகி என திறமையான பெண்ணாக இருக்கிறார். தமிழில் சூர்யாவுடன் ஏழாம் அறிவு என்ற படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து தனுஷ் உடன் த்ரீ, விஷால் உடன் பூஜை, அஜீத்குமாருடன் வேதாளம் போன்ற சில படங்களில் நடித்தார்.

தமிழில் போதிய வரவேற்பு இல்லாத நிலையில், தெலுங்கு படவுலகில் ஸ்ருதிஹாசன் முக்கிய நடிகையாக இருந்து வருகிறார். அதற்கு காரணம், படுக்கையறை காட்சிகளிலும், ஹீரோக்களுடன் நெருக்கமாக நடிப்பதிலும், கவர்ச்சி ஆடைகளை அணிவதிலும் எந்தவித கட்டுப்பாடும் இல்லாத நடிகை ஸ்ருதி ஹாசன் இருப்பதுதான்.

- Advertisement -

அதுமட்டுமின்றி திருமண வயது கடந்து பல ஆண்டுகள் கழிந்தும் இன்னும் திருமணம் செய்துக்கொள்ளவில்லை. லிவிங் டூ ரிலேஷன்சிப்பில் இதுவரை 5 ஆண்களுடன் வாழ்ந்துவிட்ட ஸ்ருதிக்கு இன்னும் திருப்தி ஏற்படாத நிலையில் இருக்கிறார். ரமணா படத்தில் விஜயகாந்துக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை மன்னிப்பு என்பது போல, ஸ்ருதிஹாசனுக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை திருமணம் என்பது போல தெரிகிறது.

இதற்கிடையே தூங்காவனம் படத்தை இயக்கிய கமல்ஹாசனின் உதவி இயக்குர் ராஜேஷ் எம் செல்வா, வீரமங்கை வேலு நாச்சியார் என்ற படத்தை எடுக்க இருக்கிறார். இந்த படம், வெள்ளையரை எதிர்த்து போராடிய வீரமங்கை வேலு நாச்சியாரின் வாழ்க்கையை தழுவிய ஒரு உண்மையான பெண் போராளியின் கதையாக உருவாகிறது.

- Advertisement -

வீரமங்கை வேலுநாச்சியார் போன்ற சரித்திர கதையில், வீரமான பெண்ணாக நடிக்க ஒரே தகுதியான நடிகை அனுஷ்கா தான். ஆனால் அவர் நடிக்காத நிலையில் நயன்தாரா நடிக்க ஒரு சமயத்தில் முடிவானது. ஆனால் அவர் சில காரணங்களால் அந்த படத்தில் நடிக்க இயலாது என வெளியேறி விட்டார். அந்த கேரக்டரில் நடிக்க அனுஷ்கா, நயன்தாரா இருவருமே பொருத்தமானவர்களாக இருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால் இப்போது ராஜேஷ் எம். செல்வா இயக்கும் வீரமங்கை வேலு நாச்சியார் படத்தில் அந்த கேரக்டரில் நடிக்க இருப்பது ஸ்ருதிஹாசன் என்ற தகவல் வெளிவந்துள்ளது. சங்கமித்ரா என்ற படத்தில் நடிக்க அவர் பல போர்க்கலைகளை கற்ற நிலையில், அந்த திறமை எல்லாம் இதில் காட்ட போகிறாராம். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அதுவும் வீரமும், ஒழுக்கமும் நிறைந்த வீரமங்கை வேலுநாச்சியார் கேரக்டரில் ஸ்ருதிஹாசன் போன்ற நடிகைகள் நடிப்பது சரியல்ல, என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்