- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி - லோகேஷ் கனகராஜ் இணையும் படத்தில் மூத்த நடிகரின் மகளுக்கு வாய்ப்பு... இதுக்கெல்லாம் அதுதான்...

ரஜினி – லோகேஷ் கனகராஜ் இணையும் படத்தில் மூத்த நடிகரின் மகளுக்கு வாய்ப்பு… இதுக்கெல்லாம் அதுதான் காரணமா இருக்குமோ…

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். லைக்கா நிறுவனம் இதனை தயாரிக்கிறது. ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் தான் இதன் இயக்குனர். அனிருத் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இதன் சூட்டிங் பணிகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் வேளையில், வேட்டையன் திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் போலி என்கவுண்டர்களை பற்றியும், அதன் பின்னனி பற்றியும் பேசுகிறது. படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளதால் இதன் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

- Advertisement -

இந்த திரைப்படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் உடன் ரஜினி இணைகிறார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கும் அனிருத்தே இசையமைக்க உள்ளார். இந்த திரைப்படம் தனது முந்தைய திரைப்படங்களைப் போல அல்லாமல், சோதனை முயற்சியில் வித்தியாசமானதாக இருக்கும் என்று லோகேஷ் கூறியிருக்கிறார்.

கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கும் மேலாக அவர் திரைக்கதை எழுதும் பணியில் ஈடுபட்டு வருகிறார். ஜூன் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான போஸ்டர் அண்மையில் வெளியானது. அதில் கை முழுக்க வாட்ச்சுகளை கட்டிக்கொண்டு ரஜினி சிரித்தபடி இருக்கும் வகையில் புகைப்படம் இடம்பெற்று இருந்தது.

- Advertisement -

அதனைப் பார்க்கும்போது இந்த திரைப்படம் தங்கக் கடத்தலை மையப்படுத்தி எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கான டைட்டில் மற்றும் இன்ட்ரோ வீடியோ வரும் 22ஆம் தேதி வெளியாகிறது. இந்த வீடியோவில் உலக நாயகனின் கமல்ஹாசன் பின்னணி குரல் கொடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஜினிகாந்தின் 171 வது திரைப்படமாக உருவாகும் இதில், நடிகை சோபனா இடம்பெற்று உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்த நிலையில் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசனுக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் தான் ஸ்ருதிஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து நடித்த இனிமேல் ஆல்பம் வெளியானது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் படத்தில் ஸ்ருதிஹாசன் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்