உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன் மகள் ஸ்ருதிஹாசன், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஏழாம் அறிவு படத்தில் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து 3, பூஜை, வேதாளம், புலி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால் தமிழில் போதிய வரவேற்பு ஸ்ருதிஹாசனுக்கு கிடைக்கவில்லை.
இதையடுத்து தெலுங்கு படவுலகம் தேடிப் போனார். கதாநாயகிகளை கவர்ச்சிக்காக மட்டுமே வாரி எடுத்துக்கொள்ளும் தெலுங்கு பட டைரக்டர்கள், ஸ்ருதிஹாசனுக்கு சில படங்களில் நடிக்க வாய்ப்பு தந்தனர். ஸ்ருதிஹாசன் கேமரா முன்பு சங்கடமே இல்லாமல் தாராளமாக கவர்ச்சி காட்டியதால், பல படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். தொடர்ந்தும் வாய்ப்பு குவிகிறது.
மும்பையில் தனியாக வீட்டில் வசித்துவரும் ஸ்ருதிஹாசன், தனது பாய் பிரண்ட் ஒருவடன் லிவிங் டூ ரிலேசன்ஷிப் முறையில், தாலி கட்டாமல் குடும்பம் நடத்தி வருகிறார். இதுவரை 5 பேருடன் இப்படி வாழ்க்கை நடத்திய நிலையில், திருமணம், தமிழில் எனக்கு பிடிக்காத கெட்ட வார்த்தை என்று ரமணா பட விஜயகாந்த் ஸ்டைலில் ஸ்ருதிஹாசன் பேசி வருவதை அப்பா கமலும் கண்டுகொள்ளவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
ஸ்ருதிஹாசனை பொருத்த வரை நல்ல பாடகியாகவும் இருக்கிறார். பல படங்களில் பாடியிருக்கிறார். ஆல்பம் சிலவும் வெளியிட்டு இருக்கிறார். இவரது தங்கை அக்ஷரா ஹாசனும் நடிகைதான். கடாரம் கொண்டான் என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால் அதன்பிறகு தமிழில் அவர் நடித்ததாக தெரியவில்லை.
இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் ஹாலிவுட் இயக்குநர் பிலிப் ஜான் என்பவரது இயக்கத்தில் நடிக்க கமிட் செய்யப்பட்டு இருக்கிறார். ஆங்கிலத்தில் பான் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தில் பெண் டிடெக்டிவ் ஆக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இங்கிலாந்தை சேர்ந்த விவேக் கல்ரா, கெவின் ஹார்ட், ஜான் ரெனோ உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.
சென்னை ஸ்டோரி என்ற இந்த படத்தில், நாயகியாக நடிக்க முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் நடிகை சமந்தா தான். அவர் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதால், அவரது கேரக்டரில் நடிக்க நடிகை ஸ்ருதிஹாசனுக்கு இந்த லக்கி சான்ஸ் கிடைத்துள்ளது. இந்த படத்தில் இருந்து சமந்தா விலக காரணம், அவரது மயோசிட்டிஸ் நோய் பிரச்னை தான். அதனால் ஹாலிவுட் டைரக்டர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை சமந்தா இழந்ததால், அது ஸ்ருதிஹாசனுக்கு கிடைத்திருக்கிறது.





