- Advertisement -
Homeபொழுதுபோக்குபாலிவுட்டில் ஏஆர் முருகதாஸ் - சல்மான்கான் காம்போவில் உருவான சிக்கந்தர் படம் - எதிர்பார்த்த வசூலை...

பாலிவுட்டில் ஏஆர் முருகதாஸ் – சல்மான்கான் காம்போவில் உருவான சிக்கந்தர் படம் – எதிர்பார்த்த வசூலை தொட்டதா? வசூல் நிலவரத்தை பாருங்க…

- Advertisement -

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை தந்தவர் இயக்குனர் ஏஆர் முருகதாஸ். குறிப்பாக கஜினி ரமணா ஏழாம் அறிவு கத்தி துப்பாக்கி சர்கார் போன்ற ஏஆர் முருகதாஸ் படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. அடுத்து அவரது இயக்கத்தில் உருவான சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி படம் வெளியாக உள்ளது.

தமிழில் மட்டுமின்றி இந்தியிலும் தொடர்ந்து படங்களை ஏ ஆர் முருகதாஸ் இயக்கி வருகிறார். சமீபத்தில் பாலிவுட் ஸ்டார் நடிகர் சல்மான் கான் மற்றும் ராஸ்மிகா மந்தனா நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடித்த சிக்கந்தர் என்ற படத்தை ஏ ஆர் முருகதாஸ் டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரித்துள்ளார்.

- Advertisement -

மேலும் இந்த படத்தில் காஜல் அகர்வால் சுனில் செட்டி உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கடந்த 30ம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் வெளியானது. ஆனால் சிக்கந்தர் படம் தியேட்டர்களுக்கு வருவதற்கு முன்பே முழு படமும் எச்டி வடிவில் பைரசி இணையத்தில் வெளியாகி விட்டது குறிப்பிடத்தக்கது.

தியேட்டர் ரிலீஸ்க்கு முன்பே இப்படி பைரசி இணையத்தில் படம் வெளியானது சிக்கந்தர் படக்குழுவை பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு சினிமா துறையினர் பலரும் தங்களது கடுமையான கண்டனத்தை தெரிவித்தனர். இந்நிலையில் சிக்கந்தர் படம் தியேட்டரில் வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அதன்படி சிக்கந்தர் படம் வெளியாகி 4 நாட்கள் ஆன நிலையில் இதுவரை உலக அளவில் 160 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. இந்தியாவில் மட்டுமே 84.25 கோடி ரூபாய் வசூல் உள்ளது. இது சிக்கந்தர் படத்துக்கு கிடைத்த மிக குறைவான வசூல் என்று கூறப்படுகிறது.

200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட சிக்கந்தர் படம் முதல் நாளில் 15 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்தது. தொடர்ந்து 4 நாட்களில் 160 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருக்கிறது. முதல் நாளில் ரூ 33 கோடி வசூலித்த டைகர் ஜிந்தா ஹை என்ற படத்தின் முதல் நாள் வசூலை சிக்கந்தர் படம் முறியடிக்கவில்லை என்பதும் சல்மான்கான் ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்