நடிகர் சிலம்பரசனுக்கு விரைவில் கெட்டிமேளம் கொட்ட அவர்கள் வீட்டில் தயாராகி விட்டனர். பொண்ணு பார்த்து வந்த வகையில் ஒரு பெண்ணை அவர்கள் குடும்பம் ஓகே செய்துவிட்டதால், விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரும் பிரபல நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் டி ராஜேந்தருக்கு 3 பிள்ளைகள். சிலம்பரசன், குறளரசன் மற்றும் இலக்கியா. இதில் குறளரசன், இலக்கியா ஆகியோருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். சில தினங்களுக்கு முன்புதான் குறளரசன் – நபீலா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பெரியப்பா ஆன சிலம்பரசன், விரைவில் திருமணம் செய்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தம்பி மற்றும் தங்கைக்கு திருமணம் ஆன நிலையில் சிலம்பரசன் திருமணம் மட்டும் தள்ளிப்போன நிலையில் அவரது பெற்றோர் டி ராஜேந்தர், உஷா மிகவும் வருத்தத்தில் இருந்தனர். மேலும், அடிக்கடி உடல்நலக்குறைவால் டி ராஜேந்தர் சிரமப்படுகின்றனர். சமீபத்தில் கூட ஒரு பொதுநிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நடிகர் சிலம்பரசனுக்கு மிக விரைவில் திருமணத்தை நடத்திவிட வேண்டும் என்ற முடிவுக்கு அவரது பெற்றோர் வந்துவிட்டனர். இதுகுறித்து துபாயில் இருக்கும் சிலம்பரசனிடமும் பேசி முடிவு செய்திருக்கிறார். விரைவில் பெண் வீட்டாரை சந்தித்து பேசவும் அவர்கள் முடிவு செய்திருக்கிறனர்.
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்புவுடன் முதன்முறையாக நடித்தவர் வரலட்சுமி சரத்குமார். போடா போடி என்ற இந்த படம் விக்னேஷ் சிவனின் முதல் படமாக இருந்தது. இந்த படத்தில் நடித்த போதே சிம்பு, வரலட்சுமிக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஏனெனில் இருவரும் மிக நெருக்கமாக இந்த படத்தில் நடித்திருந்தனர்.
இன்னும் வரலட்சுமிக்கும் திருமணம் ஆகவில்லை. விஷாலும், அவரும் திருமணம் செய்துகொள்வதாக கூறப்பட்டதும் பொய்த்து போனது. ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில், சிம்புவை தனக்கு பிடிக்கும் என வரலட்சுமியே ஓப்பனாக கூறியிருக்கிறார். அதனால் வரலட்சுமியை, சிலம்பரசனுக்கு பெண் கேட்கலாம் என டி. ராஜேந்தர் குடும்பத்தினர் முடிவு செய்திருக்கின்றனர். விரைவில் சரத்குமார், ராதிகா, சரத்குமாரின் முதல் மனைவி சாயா தேவி ஆகியோரை சந்தித்து பேசவும், முடிவு சுமூகமாக அமைந்தால் அதை பொதுவெளியில் அறிவிக்கவும் தயாராகி வருகின்றனர்.





