- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த விஷயத்தில் விஜய்க்கு முதலிடம் இல்லையா, தனுஷ், சிவகார்த்திகேயன் கூட பக்கத்துல வர முடியலையே -...

இந்த விஷயத்தில் விஜய்க்கு முதலிடம் இல்லையா, தனுஷ், சிவகார்த்திகேயன் கூட பக்கத்துல வர முடியலையே – அட இந்த ஹீரோதான் அதுல ஜெயிச்சவரா?

- Advertisement -

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக சமீபமாக ஜொலித்து வருகிறார். அவர் இப்போது வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் நடித்துவரும் விஜய் 68 படத்துக்கு பெறுகிற சம்பளம் ரூ. 200 கோடி. இன்னும் தமிழ் நடிகர்களில் இந்தளவுக்கு உயர்ந்த சம்பளம் பெறவில்லை. அதிகபட்சமாக கமல் ரூ. 150 கோடி மட்டுமே வாங்குகிறார்.

தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தில் இருக்கும் விஜய், இதைத்தொடர்ந்து தமிழக அரசியலில் கால்பதிக்க இருக்கிறார். வரும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆயத்தமாகி வருகிறார். ரசிகர்கள் செல்வாக்கு இருப்பதால், தமிழக அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றத்தில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என விஜய் உறுதியாக நம்புகிறார். அதனால் அவரது அடுத்த இலக்கு தமிழக முதலமைச்சர் நாற்காலியாக இருக்கிறது.

- Advertisement -

தமிழ் சினிமாவில் விஜய்க்கு போட்டியாக கருதப்படுபவர் அஜீத்குமார். அவர் சினிமா, அரசியல் இரண்டிலுமே ஆர்வம் இல்லாமல் பைக்கில் அதிக தூரம் பயணம் செய்வதில்தான் அதிக ஆர்வமாக இருக்கிறார். படப்பிடிப்புக்கு நடுவே பைக் ஓட்டுகிறார் என்பதை விட, பைக் பயணத்துக்கு நடுவேதான் படத்தில் நடிக்க படப்பிடிப்புக்கு வருகிறாரோ என்ற சந்தேகம்தான் பலருக்கும் ஏற்படுகிறது. இன்னும் 5 ஆண்டுகளுக்கு பிறகு சினிமாவை விட்டே விலகி விடுவார் என்ற பேச்சும் தற்போது எழுந்துள்ளது.

தமிழ் சினிமாவில் சிம்பு என்கிற சிலம்பரசன், ரஜினிகாந்த் மருமகன் தனுஷ், சிவக்குமார் மகன் சூர்யா, குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் இடம்பிடித்துள்ள சிவகார்த்திகேயன் இப்படி அனைவருமே ஒரு விஷயத்தில் ஆர்வமாக இருந்து வருகின்றனர். அது சமூக வலைதளங்களில் தனக்கான ஒரு ரசிகர் வட்டம், அதாவது பாலோயர்ஸ் வைத்திருப்பது. இதுவும் கூட ஒரு விதத்தில், நடிகர்களின் ரசிகர் பலத்தை காட்டுவதாக தான் இருக்கிறது.

- Advertisement -

அந்த வகையில் இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தில் 12.4 மில்லியன் என்ற பாலோயர்ஸ் உள்ள சிலம்பரசன் முதலிடத்திலும், 10 மில்லியன் பாலோயர்ஸ் கொண்டுள்ள விஜய் இரண்டாமிடத்திலும், 8.2 மில்லியன் பாலோயர்ஸ் உடன் சூர்யா 3ம் இடத்திலும், 7.9 மில்லியன் பாலோயர்ஸ் உடன் விஜய் சேதுபதி 4ம் இடத்திலும், 6.7 மில்லியன் பாலோயர்ஸ் உடன் தனஷ், சிவகார்த்திகேயன் 5ம் இடத்திலும் இருக்கின்றனர்.

விஜய் இந்த ஆண்டில், கடந்த ஏப்ரலில்தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தை துவங்கினார். ஆனால், சிம்பு 2020ம் ஆண்டு அக்டோபரில் இன்ஸ்டாகிராம் பக்கத்தை துவக்கினார். அதே போல், சிவகார்த்திகேயன், தனுஷ் இருவரும் தலா 6.7 மில்லியன் பாலோயர்ஸ் உடன் ஒரே நிலையில் இருக்கின்றனர். விஜய் அடிக்கடி தன் பதிவுகளை இன்ஸ்டாகிராமில் செய்தால் சிம்புவை எளிதில் முந்திவிடுவார் என்பது விஜய் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்