- Advertisement -
Homeபொழுதுபோக்குதங்கப்பதக்கம் சிவாஜியாக மாறிய இயக்குனர் மணிரத்னம்; சிம்புவால் ஏற்பட்ட தலைவலி - நீடிக்கும் தக்லைப் பரிதாபங்கள்

தங்கப்பதக்கம் சிவாஜியாக மாறிய இயக்குனர் மணிரத்னம்; சிம்புவால் ஏற்பட்ட தலைவலி – நீடிக்கும் தக்லைப் பரிதாபங்கள்

- Advertisement -

இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து இப்போது தக்லைப் என்ற படத்தை டைரக்ட் செய்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன், துல்கர் சல்மான், ஜெயம் ரவி, சித்தார்த் மற்றும் நடிகைகள் திரிஷா, அபிராமி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சைபீரியா நாட்டில் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் இப்போது ராஜஸ்தானில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

கால்ஷீட் உள்ளிட்ட சில காரணங்களால் நடிகர்கள் துல்கர் சல்மான், ஜெயம் ரவி, சித்தார்த் என மூவருமே இந்த படத்தை விட்டு விலகி விட்டனர்.மணிரத்னம் மனைவி, நடிகை சுகாசினி, தக்லைப் படத்தை விட்டு வெளியேறிய நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்ய முயற்சித்து வருகிறார். ஏனெனில் இப்படி படத்தில் கமிட் ஆன நடிகர்கள் வெளியேறினால், தனது கணவருக்கு அவப்பெயர் ஏற்படும் என்பதால், அவர் இந்த முயற்சிகளை ஈடுபட்டுள்ளார்.

- Advertisement -

தக்லைப் படத்தில் இருந்து துல்கர் சல்மான் வெளியேறியதால், அவரது கேரக்டரில் நடிக்க நடிகர் சிம்புவை மணிரத்னம் கமிட் செய்துள்ளார். ஆனால் அது அவருக்கு தலைவலியாக மாறியுள்ளது. அன்பானவன் அடங்காதவன் அசராதவன், வெந்து தணிந்தது காடு படங்களில் நடித்த வகையில் நடிகர் சிம்பு, தயாரிப்பாளர்கள் மைக்கேல் ராயப்பன், ஐசரி கணேஷ் ஆகியோருக்கு பலகோடிகள் பணம் தர வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே பலமுறை அவர்கள் சிம்புவிடம் பணம் கேட்டும், சிம்பு பணத்தை தராத நிலையில், பெப்சி அமைப்பின் தலைவர் ஆர் கே செல்வமணி வாயிலாக, சிம்பு நடிக்கும் படத்திற்கு பெப்சி தொழிலாளர்கள் பணி செய்ய மாட்டார்கள் என்ற ஒரு நிபந்தனையை அந்த தயாரிப்பாளர்கள் கொண்டு வந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் இப்போது நடிகர் மணிரத்னம் இயக்கும் தக்லைப் படத்தில் சிம்பு நடிக்கும் பட்சத்தில், அங்கு பெப்சி தொழிலாளர்கள் பணி செய்ய மாட்டார்கள் என்ற தகவலை ஆர்கே செல்வமணி, இயக்குனர் மணிரத்னம் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்.

- Advertisement -

ஆனால் பெப்சி தொழிலாளர்களுக்கு ஏகப்பட்ட உதவிகளை செய்தவர் டைரக்டர் மணிரத்னம். குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் பெப்சி தொழிலாளர்கள் வீடுகளில் முடங்கி இருந்தபோது, அவர்களுக்காக மாதம்தோறும் பல லட்ச ரூபாய் செலவில் மளிகை சாமான்கள் வாங்கி கொடுத்து பல்வேறு உதவிகளை செய்தவர்தான் மணிரத்னம்.

அதனால் பெப்சி தொழிலாளர்களை பொருத்தவரை மணிரத்னம் மீது மிகுந்த மரியாதையும் மதிப்பும் கொண்டிருக்கிற சூழ்நிலையில், சிம்பு பிரச்னையால் மணிரத்னம் இயக்கும் படத்துக்கே பணிபுரிய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக பெப்சி தொழிலாளர்கள் புலம்பி வருகின்றனர். சிம்புவை கமிட் செய்ததால் தங்கப்பதக்கம் சிவாஜி போல, சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்ற பாடும் அவல நிலைக்கு இயக்குனர் மணிரத்னம் தள்ளப்பட்டுள்ளார்.

- Advertisement -

சற்று முன்