தமிழ் சினிமாவில் வாலி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்ஜே சூர்யா. 1990களில் வெளியான இந்த படம் அஜீத்குமாருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக இருந்தது. சிம்ரன் ஜோதிகாவுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல அடையாளத்தை கொடுத்தது. வேலையில்லாத பட்டதாரி கேரக்டரில் விவேக் காமெடி ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்தது.
இந்த படத்தை அடுத்து எஸ்ஜே சூர்யா இயக்கிய படம் குஷி. விஜய் ஹீரோவாக நடித்த இந்த படத்தில் ஜோதிகா நாயகியாக நடித்திருந்தார். வாலி படத்தில் கேமியோ ரோலில் வந்த ஜோதிகா இந்த படத்தில் செல்வி என்ற கேரக்டரில் நடித்திருப்பார். அவரது அப்பாவாக விஜயகுமார் நடித்திருந்தார். நிழல்கள் ரவி மும்தாஜ் விவேக் நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோரும் நடித்திருந்த இந்த படமும் மாஸ் ஹிட் படமானது.
அதன்பிறகு நியூ அன்பே ஆருயிரே கள்வனின் காதலி உள்ளிட்ட படங்களில் எஸ்ஜே சூர்யாவே நாயகனாக நடித்திருந்தார். அதன்பிறகு 10 ஆண்டுகள் சினிமாவை விட்டு காணாமல் போன எஸ்ஜே சூர்யா, இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இறைவி படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
மான்ஸ்டர் ஸ்பைடர் மெர்சல் மாநாடு மார்க் ஆண்டனி ராயன் இந்தியன் 2 கேம் சேஞ்சர் என இப்போது பிஸியான நடிகராக பல படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். இப்போது தமிழ் சினிமாவில் வில்லன் கேரக்டர் என்றாலே எஸ்ஜே சூர்யா தான் என்று சொல்லும் அளவுக்கு பிஸியாக நடித்து வருகிறார்.
விஜய் நடித்த பல படங்களில் குஷி படத்துக்கு அதிக சிறப்பம்சங்கள் உண்டு. இந்த படத்தில் ஒரு பாடலில் விஜயுடன் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி நடனம் ஆடியிருந்தார். கட்டிப்புடி கட்டிப்புடிடா என்ற பாடல் காட்சியில் மும்தாஜூடன் விஜய் ஆடியிருப்பார். கல்லூரி மாணவராக விஜய் நடித்த சில படங்களில் இதுவும் ஒன்று.
நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற குஷி படத்தின் இயக்குனர் நடிகர் எஸ்ஜே சூர்யா அந்த படம் குறித்து கூறியதாவது, குஷி படத்தில் ஜோதிகாவை, அவரது அப்பா விஜயகுமார் செல்லமா செல்வின்னு கூப்பிடுவார். அது என் அக்காவோட பெயர்தான். என்னோட அப்பா அக்காவை ஏலே செல்வி என்றுதான் கூப்பிடுவார். எங்கப்பா ஞாபகமா தான் விஜயகுமார் சாரை என் அப்பாவா சித்தரிச்சு அந்த கேரக்டரை எழுதினேன், என்று எஸ்ஜே சூர்யா கூறியிருக்கிறார்.





