தமிழ் சினிமாவில் சட்டம் என் கையில் என்ற படம் மூலம் வில்லன் நடிகராக அறிமுகமானவர் சத்யராஜ். இந்த படத்தின் நாயகன் கமல்ஹாசன். அதன்பிறகு பல படங்களில் வில்லனாக நடித்த நடிகர் சத்யராஜ், இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் கடலோர கவிதைகள் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்தார்.
குறிப்பாக கடந்த 1990களில் வெளியான பல படங்கள் ஹீரோவாக சத்யராஜூக்கு நல்ல வெற்றியை பெற்றுத் தந்தன. திருமதி பழனிசாமி தெற்கு தெரு மச்சான் பிரம்மா ரிக்ஷா மாமா நடிகன் ஜீவா என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு பூவிழி வாசலிலே என பல படங்களில் சத்யராஜ் நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது.
அந்த காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. இப்போது நயன்தாராவை போல அப்போது தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த நடிகை சில்க் ஸ்மிதா தான். அவர் நடித்தாலே படங்கள் வெற்றி பெற்றுவிடும் என்ற சென்டிசென்ட் சினிமா தயாரிப்பாளர்கள் மத்தியில் இருந்தது. அதனால் தயாரிப்பாளர்கள் சில்க் ஸ்மிதா கால்ஷீட்டுக்காக தவம் இருந்தனர்.
அதே நேரத்தில் சில்க் ஸ்மிதா படத்தில் நடிக்க தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களுக்கு பல கண்டிஷன்களை போடுவார். படப்பிடிப்பு தளத்தில் அந்த கண்டிஷன்களை பின்பற்றாவிட்டால் அப்படியே கிளம்பி போய்விடுவார். பிறகு அவர் நடிக்க வரமாட்டார். அதனால் அவரை நடிக்க வைக்கவே தயாரிப்பாளர்கள் திண்டாட்டமடைந்து விடுவர் என்ற தகவல்கள் இன்றும் தமிழ் சினிமா வட்டாரத்தில் உலா வருகின்றன.
நடிகர் சத்யராஜ் கடந்த 1980 90களில் வளர்ந்து வரும் நடிகராக இருந்தார். ஆனால் அப்போது சில்க் ஸ்மிதா உச்ச நட்சத்திரமாக சினிமாவில் பிரபலமாக இருந்தார். அந்த சூழலில் ஜீவா ஆளப்பிறந்தவன் உள்ளிட்ட சில படங்களில் சத்யராஜூடன் சில்க் ஸ்மிதா இணைந்து நடித்திருக்கிறார். அப்போது ஜீவா என்ற படத்தில் நடிப்பதற்காக சில்க் ஸ்மிதாவிடம் பேசிய போது, சத்யராஜ் ஹீரோ என்றதால் இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோவா? நான் இவருடன் நடிக்க மாட்டேன் என்று மறுத்திருக்கிறார்.
அதன்பிறகு சத்யராஜ் மிகப்பெரிய ஜமீன்தார் வீட்டுப் பிள்ளை, கோவையை சேர்ந்தவர். சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னைக்கு வந்து படங்களில் சிரமப்பட்டு நடித்துக்கொண்டு இருக்கிறார் என்று சில்க் ஸ்மிதாவிடம் கூறி சமாதானம் செய்திருக்கின்றனர். அதன்பிறகுதான் ஜீவா படத்தில் சத்யராஜூடன் சில்க் ஸ்மிதா நடிக்க ஓகே சொல்லியிருக்கிறார். ஆனால் ஒரு கட்டத்தில் சத்யராஜ், சில்க் ஸ்மிதா இருவரும் நெருங்கிய நட்பில், நல்ல நண்பர்களாக இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





