- Advertisement -
Homeபொழுதுபோக்கு5 மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகும் ‘சில்க் ஸ்மிதா குயின் ஆப் தி சவுத்’...

5 மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகும் ‘சில்க் ஸ்மிதா குயின் ஆப் தி சவுத்’ வீடியோ கிளிம்ப்ஸ் வெளியீடு – கனவுக் கன்னியை தரிசிக்க தயாராகும் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இதுவரை ஏகப்பட்ட கவர்ச்சி நடிகைகள் வந்துவிட்டனர். ஆனால் 1980களில் உச்சத்தில் இருந்த நடிகை சில்க் ஸ்மிதாவை தான் இன்றும் ரசிகர்கள் தமிழ் சினிமாவின் கவர்ச்சி கன்னியாக கூறுகின்றனர். இன்னும் 1980, 90களில் பார்த்த அதே ரசனையுடன் இப்போதும் சில்க் ஸ்மிதா நடித்த படங்களை விரும்பி பார்க்கின்றனர். அவர் மறைந்து பல ஆண்டுகளாகியும் இன்னும் ரசிகர்கள் விரும்பும் ஒரு நடிகையாக சில்க் ஸ்மிதா இருக்கிறார்.

கடந்த 1980ம் ஆண்டில் நடிகர் மற்றும் இயக்குனர் வினு சக்கரவர்த்தி இயக்கிய வண்டிச்சக்கரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சில்க் ஸ்மிதா. குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை கண்ட சில்க் ஸ்மிதா ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை, அங்கீகாரத்தை பெற்றார். ரஜினி கமல் போன்ற முன்னணி நடிகர்கள் படங்களில் கூட சில்க் ஸ்மிதா கால்சீட்டுக்காக காத்திருக்க வேண்டியிருந்தது.

- Advertisement -

கவர்ச்சியான கேரக்டர்களில் மட்டுமின்றி சில படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து சில்க் ஸ்மிதா அசத்தினார். பாலு மகேந்திராவின் மூன்றாம் பிறை, பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை சில்க் ஸ்மிதா வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டை பெற்றார். ஒரு கட்டத்தில் படங்களின் பலத்த வசூலுக்கு காரணம் சில்க் ஸ்மிதா என்று சொல்லும் அளவுக்கு தமிழ் சினிமாவில் அவரது ஆளுமை இருந்தது.

அன்று முதல் இன்று வரை சில்க் ஸ்மிதாவுக்கு என தமிழ்நாட்டில் ரசிகர் பட்டாளம் உள்ளது. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பே அவர் மர்மமான முறையில் இறந்துவிட்டார். இன்னும் அவரது மறைவுக்கான உண்மையான காரணம் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தற்போது நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படம் உருவாகிறது.

- Advertisement -

இயக்குனர் ஜெயராம் இயக்கும் இந்த படத்தில், சில்க் ஸ்மிதா கேரக்டரில் நடிகை சந்திரிகா ரவி நடிக்கிறார். இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் பேய் கேரக்டரில் நடித்தவர். சில்க் ஸ்மிதா குயின் ஆப் தி சவுத் என்ற பெயரில் உருவாகும் இந்த படத்தை எஸ்பி விஜய் தயாரிக்கிறார். தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக இது உருவாகிறது.

இப்போது இந்த படத்தின் அறிவிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது இதில் மறைந்த பாரத பிரதமர் இந்திரா காந்தி அனைத்து செய்தித்தாள்களிலும் சில்க் ஸ்மிதா பற்றி செய்தி இருப்பதை பார்த்து யார் இந்த சுமிதா என்று கேள்வி எழுப்புவது போல் வீடியோ துவங்குகிறது. அதன்பிறகு சில்க் ஸ்மிதா கேரக்டரில் நடித்துள்ள சந்திரிகா தேவி கவர்ச்சி ஆடையில் வந்து நாய்களுக்கு உணவளிக்கிறார். பொதுமக்கள் சில்க் ஸ்மிதாவை ஆச்சரியமாக பார்க்கின்றனர். சில்க் ஸ்மிதா இதுவரை தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://youtu.be/_K2bKGbHSv0

- Advertisement -

சற்று முன்